உங்க ஐகியூ திறனை டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்.. படத்தில் காலியாக உள்ள கப் எங்கே இருக்கு? 5 செகண்ட் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக கப்கள் உள்ளன. இந்த கப்களில், ஐஸ்கிரீம், டீ, காபி என நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு கப் மட்டும் காலியாக உள்ளது. அது எந்த கப் என்பதை 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும்.
நம் மூளையை கசக்கி பிழியவைத்து நம் கண்களையே நம்மை ஏமாற்ற வைக்கும் படங்கள் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள். கானல் நீரை தூரத்தில் இருந்து பார்த்தால் எப்படி ஆறு போல தெரிந்து நெருங்கி போய் பார்த்தால் எதுவுமே தெரியாமல் ஏமாற்றுமோ அதேபோலத்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும்.

மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் மற்றொரு கோணத்தில் பார்த்தால் வேறு மாதிரியாகவும் தெரியும். மூளைக்கு வேலை வைக்கும் இத்தகைய சவால் மிக்க ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்பொது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற காலக்கெடு இருப்பதால் இந்த இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதற்குள் செஸ் கேமில் எப்படி தலையை பிய்த்துக்கொள்ள வைக்குமோ அதேபோல மூளையை கசக்கி பிழியவைத்துவிடும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அடிக்கடி பார்த்து விடையை கண்டுபிடிப்பது ஒருவரின் கவனிப்பு திறன், அறிவுக்கூர்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும் எனக் கூட சில ஆய்வுகள் சொல்கின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக கப்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கப் நிறைய டீயோ, காபியோ, ஐஸ்கிரீம் என இருக்கிறது.
ஆனால் இத்தனை கப்களுக்கு மத்தியில் ஒரே ஒரு கப் காலியாக உள்ளது. அது எந்த கப் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 5 செகண்ட்தான் டைம்.. என்ன சவாலுக்கு ரெடியா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்திற்கான விடையை கவனிக்க தொடங்குங்கள்... 1,2,3,.. 5 உங்களுக்கான நேரம் முடிந்தது. விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. படத்தில் காலியாக கிளாசே இல்லை என நினைப்பவர் என்றால் கூடுதல் 5 செகண்ட் எடுத்து முயற்சித்து பாருங்கள்.

இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இரண்டு டிப்ஸ் தருகிறொம்.. முதல் டிப், படத்திற்கான விடை இடது பக்கம் தான் உள்ளது. மற்றொன்று எந்த கப், அதன் உள்பக்கமும் அதே நிறத்தில் தெரிகிறதோ அதுதான் காலி கப்.. இப்போது அனைவரும் விடையை கண்டுபிடித்து இருக்ககூடும். இன்னமும் கூட விடை கண்டுபிடிக்க முடியாதவர்கள் என்றால் விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications