நீங்க சைலண்ட் டைப்பா? வெளிப்படையா பேசுபவரா? படத்தில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்
சென்னை: இந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் கண்ணுக்கு என்ன தெரிகிறது.. சுறாமீனா.. அல்லது மனித முகமா.. எது உங்கள் கண்ணுக்கு முதலில் தெரிந்தது என்று சொல்லுங்கள். அதை வைத்து உங்க கேரக்டரை ஓரளவு கணிச்சிடலாம்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் இப்போது அதிகம் டிரெண்ட் ஆகின்றன. பொதுவாகவே இந்த இல்யூஷன் படங்களில் விடைகள் நேரடியாக இருக்காது. நமது கண்களை நம்மாலேயே நம்ப முடியாத அளவுக்கு குழப்பி விடும். படத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் பொருட்களில் இருக்கும் சிறு வித்தியாசத்தை கண்டுபிடிப்பது உள்ளிட்ட புதிர்களுடன் இந்த இல்யூஷன் படங்கள் இருக்கும் என்பதால் நெட்டிசன்களும் அதிகம் ரசிக்கின்றனர்.

மறைந்திருக்கும் விஷயங்களை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடப்படும் இதனால், அந்த குறிப்பிட்ட வினாடிக்குள் நம்மால் கண்டுபிடிக்க முடிகிறதா ? என பலரும் முயற்சித்து பார்ப்பார்கள்... இதனால், நெட்டிசன்களின் பேவரைட்டாகவும் தற்போது இல்யூஷன் படங்கள் மாறிவிட்டது என்றால் மிகையல்ல.. அதேபோல், ஒரு படத்தை எந்த கோணத்தில் பார்க்கிறோம் என்பதை நமது எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்...
அமைதியான நபரா...அல்லது மனதில் பட்டதை டக்கெனெ சொல்லிவிடக்கூடியவரா என்பதையும் ஓரளவு கணித்து விடலாம் என்று சில ஆய்வுகள் கூட சொல்கின்றன. அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் பார்த்த உடன் முதலில் என்ன தெரியுகிறது என்று சொல்லுங்கள்..அதை வைத்து ஓரளவு கண்டுபிடிச்சிடலாம்..

உங்கள் கண்ணுக்கு சுறா மீன் தெரிந்தால்: நீங்கள் மிகவும் நம்பிக்கை மிக்க நபராக இருப்பீர்கள். பிற நபர்கள் உங்களை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவராகவும் ஈசியாக அணுகும் நபர்களாகவும் இருப்பீர்கள். கூட்டத்திலும் தனி நபராக தெரியும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். விவாதம் என்று வந்து விட்டால் பயமின்றி உங்கள் கருத்துக்களை முன்வைப்பீர்கள்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நபராக இருப்பீர்கள். இப்படி வெளிப்படையாக பேசுவதால் சிலர் உங்களை தவறாகவும் நினைப்பார்கள். இதுவே உங்களுக்கு கொஞ்சம் சிரமத்தையும் கொடுக்கலாம்.

முதலில் மனித முகம் தெரிந்தால்: இந்த படத்தில் முதலில் மனித முகம்தான் கண்ணுக்கு தெரிந்தது என்றால் உங்கள் கேரக்டர் இப்படி இருக்க வாய்ப்பு உள்ளது. இளகிய மனம் கொண்ட நபராக நீங்கள் இருக்கலாம். இயற்கையிலேயே எளிதில் மன்னிக்கும் தன்மை கொண்ட நபராக இருப்பீர்கள். இதனாலேயே பலரும் உங்களை நேசிப்பார்கள்.
சில நேரம் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடைய நபராகவும் இருப்பீர்கள். எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு சவுகரியமான இடத்தையே நாடுவீர்கள். உங்களின் ஜாலியான அணுகுமுறையை நண்பர்கள் அதிகம் விரும்புவார்கள். விவாதத்தை நீங்கள் வெறுக்க கூடிய நபராக இருப்பீர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications