நீங்க அதிகமாக உணர்ச்சிவசப்படுபவரா.. இந்த மீன் புகைப்படத்தை உற்று பாருங்க.. சின்னதா ஒரு டெஸ்ட்
சென்னை: Optical illusion personality test என்று அழைக்கப்படும் சோதனை,புகைப்படங்களை வைத்து செய்கிறார்கள். நீங்கள் இந்த மீன் புகைப்படத்தை பாருங்கள். இதில் எதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை வைத்து நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவரா அல்லது அமைதியாகக் கையாளக்கூடியவரா என்பதை அறிய முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்கள் டிக் டாக்கில் மிகவும் பிரபலம். உங்கள் முன்பு ஒரு புகைப்படத்தை காட்டுவார்கள். அதில் எதை விரும்பி உடனே பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் குணத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். நீங்கள் மனஅழுத்தத்தை எப்படி கையாளர்வீர்கள், நீங்கள் அடிக்கடி கோபப்படும் நபரா, அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவரா, நீங்கள் அமைதியானவரா என உங்களை பற்றி புகைப்படத்தை வைத்தே கதை சொல்வார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சோதனையை தான் நாம் பார்க்க போகிறோம்,. பிரபல டிக்டாக்கர் மியாவால் அண்மையில் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு அதிக அளவில் மக்களை போய் சேர்ந்தது,
அந்த படத்தை பொறுத்தவரை நீங்கள் முதலில் எதைப் பார்க்கிறார்கள் என்று கேட்கப்பார்.. அதில் மீன் அல்லது மேகம் என இரண்டு இருக்கும். இதில் எதை பார்க்கிறீர்களோ அதன்படி, உங்கள் காதல் மற்றும் உணர்ச்சி வசப்படும் தன்மை குறித்து அவர்கள் விவரிக்கிறார்.
சயின்ஸ் டைரக்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, "நீங்கள் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்படுவீர்கள் என்பது தீவிரமான உணர்ச்சி அனுபவத்தை பொறுத்து, அது முகத்தில் வெளிப்படையாக மற்றும் உங்களை அறியாமல் சட்டென வெளிப்படுத்துவீர்கள் . இதுதான் நீங்கள் எந்தஅளவிற்கு உணர்ச்சிபூர்வமானவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிறது".
இந்நிலையில் மீன் புகைப்படத்தை பதிவிட்ட மியாவின் சொல்படி, நீங்கள் முதலில் மேகத்தைக் கண்டால், வெளியில் பார்ப்பதற்கு நீங்கள் வலுவாகவும், நெகிழ்ச்சி உள்ளவர்களாக தோன்றுவீர்கள். ஆனால் உள்ளுக்குள் வேறு மாதிரி சென்செட்டிவ்வான ஆளாக இருப்பீர்கள். அதாவது மற்றவர்களின் செயல்களால் நீங்கள் எளிதில் மனரீ தியாக பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படுவதால் ஒருவருடன் நீண்ட கால நட்பு பாராட்டுவது சவாலாக இருக்கும்..
மறுபுறம், நீங்கள் முதலில் மீனைக் கண்டால், நீங்கள் உணர்ச்சிசப்படுபவராக இல்லாதவராக இருப்பீர்கள். வாழ்க்கையின் எதார்த்தங்களை புரிந்தவர்களாக இருப்பீர்கள்.. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு, உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் முழு மனதுடன் செயல்படுவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சில பார்வையாளர்கள் மீன் மற்றும் மேகம் இரண்டையும் கண்டால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். ஆனால் இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற சோதனைகள் வேடிக்கையானவையாக பார்க்கப்படுகிறது. எனவே ஒருவரின் மனதை பற்றிய உண்மையான விஷயங்களை அறிய முடியாது; ஆனால் துல்லியமாக இருக்கே என்று சில விஷயங்கள் உங்களுக்கு தோன்ற வாய்ப்பு உள்ளது.
எனவே, இதுபோன்ற புதிர் டெஸ்ட்டுகள் பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை எந்த அறிவியல் அல்லது உளவியல் ரீதியான விஷயமும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். புகைப்படங்களை வைத்து நடக்கும் புதிர் போட்டிகள் பொதுவாக உங்களை புத்தி கூர்மை உள்ளவராக மாற்றும் , சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்த உதவுவும். எனவே நீங்கள் புதிர் கணக்கு,புதிர் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடுங்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications