Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார் நிற்கும் இடத்தில் மறைந்திருக்கும் நம்பர் என்ன? 10 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா வேற லெவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் கார் பார்க்கிங் செய்வதற்கு எதுவாக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் காருக்கான பார்க்கிங் எண் என்ன என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்...10 செக்கண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் Puzzle எனப்படும் புதிர் படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் சுற்றும் நெட்டிசன்களுக்கு இந்த படங்கள் பயனுள்ள பொழுதுபோக்காகவும் அறிவாற்றலை சோதித்து பார்க்கும் விதமாகவும் உள்ளன.

Optical Illusion Puzzle Can you find out the Parking Number of the Car within 10 seconds

இதனால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படும் ஒன்றாக இத்தகைய இல்யூஷன் படங்கள் உள்ளன. இன்று பார்க்க இருக்கும் புதிர் படம் கொஞ்சம் வித்தியாசமானது. ரொம்பவே ஈசியானதாக இருந்தாலும் உங்களின் சிந்தனைதிறன் அறிவாற்றலை டெஸ்ட் செய்யும் விதமாக உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கார்கள் வரிசையாக பார்க்கிங் செய்ய வசதியாக பார்க்கிங் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காருக்கும் அதற்கு ஏற்ற பார்க்கிங் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரிசைப்படி ஒவ்வொரு காரும் அதற்கு ஏற்ற இடத்தில் பார்கிங் செய்யப்படும். ஆனால் இப்போது மற்ற கார்கள் எல்லாம் வெளியில் சென்றுவிட்டன. ஒரே ஒரு சிவப்பு நிற கார் மட்டுமே பார்க்கிங் எண்ணை மறைத்தபடி பார்க் செய்யப்பட்டுள்ளது.. சிவப்பு நிற கார் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் மறைந்து இருக்கும் எண் எது? என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. என்ன சவாலுக்கு ரெடியா...

போட்டி தேர்வுகளுக்கு கேட்ட கேள்வி போல இருக்கிறது என நினைப்பது புரிகிறது... கிட்டத்தட்ட அப்படியான ஒரு கேள்வியாக இருந்தாலும் இது ரொம்பவே எளிதானது.. இன்னும் சொல்லப்போனால், தேர்வுகளுக்கு ரெடியாகி வருபவர்களுக்கும் அவர்களின் தயார் நிலையை பரிசோதிக்கும் வகையிலான ஒரு கேள்விதான்.. இது..

கார் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் பார்க்கிங் எண் என்ன என்பதை 10 செகண்டில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்... உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1,,2,3..... 10... ஒகே டைம் ஓவர்... உங்களில் பலரும் இந்த புதிர் படத்திற்கான விடையை எளிதாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். 10 செகண்ட்டே அதிகம்... வெறும் 5 செக்கண்டில் கண்டுபிடித்து விட்டோம் என பலரும் நினைப்பது தெரிகிறது.

விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்... சரி விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று என்ன ஃபார்முலாவை போட்டால் விடை வரும் என மூளையை கசக்கி பிய்த்து கொண்டு இருப்பவர்கள் ஃபார்முலா எல்லாம் தேவையில்லை. கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து பார்த்தால் விடை எளிதில் கிடைத்துவிடும். அப்படியும் அந்த டிரிக்ஸ் தெரியவில்லை என்றால், விடையை நாங்களே விடையை சொல்லி விடுகிறோம்..

படத்தை பார்த்ததும் 16, 06, 68, 88, 98 என பார்ப்பதற்கு தெரியலாம்.. இதனால், ஒரு சீரற்ற தொடராக உள்ளது.. எப்படி பார்த்தாலும் விடை வரவில்லையே என நினைக்கிறீர்களா... எண்களை அப்படியே திருப்பி போடுங்கள்... அதாவது சின்ன டிரிக்ஸ் தான். அப்படியே எண்களை எல்லாம் தலைகீழாக பாருங்கள்..

அதாவது படத்தில் உள்ள எண் வரிசையை 86, 87, 88, 89, 90 - என திருப்பி பாருங்கள்... இப்போது கார் நிற்கும் இரண்டாவது படத்தில் வரும் எண் என்ன? என்பதை நீங்களே யூகித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்... கார் நிற்கும் இடத்தில் 87 என்ற எண் உள்ளது. படத்திற்கான விடையும் இதுவே..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+