மழை பெய்யுது.. மொட்டை மாடியில் உள்ள துணியை எடுக்கணும்.. எப்படி போவீங்க? ஜாலியா ஒரு கேள்வி
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொட்டை மாடியில் துணிகள் காயப் போடப்பட்டுள்ளது. மழை பெய்ய தொடங்கியதால் அந்த துணிகளை உடனே எடுக்க வேண்டும். ஆனால் படத்தில் உள்ள நபர் மொட்டை மாடிக்கு எப்படி செல்வது என்ற பாதையை மறந்துவிட்டார். எனவே அந்த நபர் எந்த ஏணிகள் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு செல்ல முடியும்? என்பதை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்.. அதுவும் 15 செகண்டில் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் மூளைக்கு வேலை வைக்கும் படங்கள் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள், பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் விதமாக இல்யூஷன் படங்களில் உள்ள புதிருக்கான விடையை கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார்கள். பொதுவாக இல்யூஷன் படங்களில் ரொம்பவே ஈசியானதுதான்.

அனைவரும் கண்டுபிடிக்கும் வகையில் எளிதாக இருக்கும். ஆனால், அதில் சின்னதாக ஒரு டிரிக்ஸ் இருக்கும்.. அந்த சூட்சமத்தை கண்டுபிடித்துவிட்டால் சில வினாடிகளில் விடையை கண்டுபிடித்துவிடலாம். அதே வேளையில், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடையை கண்டுபிடிப்பது என்பது ஒருவரின் அறிவுத்திறனை சார்ந்ததே என்றும் சில ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால், அதெல்லாம் தேவையில்லை பயிற்சி இருந்தால் அனைவருமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்றும் சொல்கிறார்கள்.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமனது. பார்ப்பதற்கு எளிதில் தெரிந்தாலும் கூட மூளையை கசக்கி பிழியவைக்கும் விதமாக இந்த இல்யூஷன் படம் உள்ளது.

இந்த படத்தை நன்கு உற்று பாருங்கள்.. 5 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் உச்சியில் கொண்டு துணிகளை காயப்போட்ட நபர்.. கீழே இறங்கி தரை தளத்திற்கு வந்ததுதான் தாமதம்.. வெளியில் மழை வெளுத்து கட்ட தொடங்கிவிட்டது. இதனால், எல்லாம் நம்ம நேரம் என தலையில் அடித்துக் கொண்ட நபர் மீண்டும் ஐந்தாவது மாடிக்கு சென்று துணிகளை எடுக்க நினைக்கிறார்.
ஆனால், அவருக்கே மொட்டை மாடிக்கு எப்படி செல்வது என்ற பாதையை மறந்துவிட்டார். மொட்டை மாடிக்கு செல்வதற்கு ஏணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதை என்பது நேராக இல்லை. எனவே இந்த நபர் 5-வது மாடிக்கு செல்வதற்கு வழியை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. மழை வேற பெய்து கொண்டு இருப்பதால் ரொம்ப நேரம் டைம் இல்லை.

எனவே 15 செகண்டில் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும்... உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.. 1,2,3,4,....15 உங்களில் பலரும் படத்திற்கான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள் என நினைக்கிறோம். குறிப்பிட்ட செகண்டிற்குள் கண்டுபிடித்த நபர் நீங்கள் எனில் நீங்கள் உண்மையாகவே அதி புத்திசாலிதான்..
விடையை கண்டுபிடிக்க முடியாமல் மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப்பவர்கள் கூடுதலாக 10 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இப்போது முயற்சித்து பாருங்கள்... இன்னமும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவர்களுக்கு விடை இங்கே தெளிவாக குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தை பாருங்கள்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications