கழுகு பார்வைக்கு ஒரு சவால்.. கட்டுமான சீனில் மறைந்திருக்கும் டூத் பிரஷ்! 8 செகன்ட்ஸ்தான்.. முடியுமா?
சென்னை: இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறுவது போன்ற படத்தில் உங்கள் கழுகு பார்வைகளால் ஒரு பல் தேய்க்கும் பிரஷை தேடி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
கண் கட்டி வித்தை எனப்படும் ஆப்டிக்கல் இல்யூஷனை வெறும் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டாம். இது அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. சுவாரஸ்யமாக இருப்பதால் நிறைய பேர் இதை விளையாடுகிறார்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் சுவாரஸ்யம் மட்டும் இல்லாமல் த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும்.

இது போன்ற விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் உங்கள் கவனத்தை திசை திருப்பாமல் வைத்திருக்கும். உங்கள் கற்பனை வளத்தை அதிகரிக்கும். எண்ணற்ற பிர்சசினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திறமையை வளர வைக்கும்.
மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதுதானே ஆப்டிக்கல் இல்யூஷன் என சாதாரணமாக நினைக்காதீர்கள். இதன் மூலம் நிறைய புதிர்களை திறமையாக கையாளலாம். உங்கள் கழுகு பார்வைக்கு வேலை வந்துவிட்டது. இந்த கட்டுமான பணிகள் நடைபெறுவது போன்ற படத்தில் உங்கள் மூளையை செலுத்துங்கள்.
இதில் ஒரு பல் தேய்க்கும் பிரஷ் மறைந்திருக்கிறது. அதை நீங்கள் 8 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். புல்டோசர், ஜேசிபி இயந்திரங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஆட்களும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பிஸி வேளையில் ஒரு சின்ன பல் தேய்க்கும் பிரஷை கண்டுபிடிக்க வேண்டும்.

நன்கு ஜூம் செய்து கூர்மையாக பார்த்தால்தான் படத்தில் இருப்பது தெரியும். 8 செகன்ட்ஸ் முடிய போகிறது. எல்லா இடங்களையும் ஸ்கேன் செய்வது போல் பாருங்கள். அப்போதுதான் கிடைக்கும். என்ன கிடைத்துவிட்டதா? கிடைக்கவில்லையா, சரி நேரம் போகிறது, நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். கவலையேபடாதீர்கள்.
ஒரு படிக்கட்டு போல் இருக்கிறதே அங்கிருக்கும் ரீஃபரில்தான் பிரஷ் இருக்கிறது. உங்களுக்காக படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. என்ன இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா, அப்படியென்றால் இதை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் பிரஷ்ஷை கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். அவர்களுக்கும் இந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். குழந்தைகள், பள்ளி மாணவர்களிடமும் இது போன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தினால் அவர்கள் போனில் மூழ்கி போகமாட்டார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications