பழுத்த வெற்றிலை இலைகளுக்கு மத்தியில் ஒரு அழகிய பட்டாம்பூச்சி! 10 வினாடியில் கண்டுபிடித்தால் ஜீனியஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் வெற்றிக் கொடி இருக்கிறது. அதில் ஒரு அழகான பட்டாம்பூச்சி ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை நீங்கள் 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் ஜூனியஸ்!

அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் பாஸ், கில்லாடி! என்ன இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? ஓய்வு நேரத்தை அரட்டை அடித்து வெட்டி கதை பேசி வீணாக்குவதைவிட்டுவிட்டு தினமும் இது போல் ஏதாவது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடினால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

Optical Illusion Spot the butterfly in Betel leaf plant

அந்த நாளும் புத்துணர்ச்சியாக இருக்கும். புதிரை கண்டுபிடிக்கும் முன்பு ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?

திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?

அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.

நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. கடைசியில் விடை சொல்லும் போதுதான் அய்யோ இது கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணுவோம். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம்.

பூச்சிகள் தாக்கிய நிலையில் மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு வெற்றிலைக் கொடி உள்ளது. அந்த கொடி ஏன் செழிப்பாக இல்லை என்பதையெல்லாம் விடுங்கள். இந்த கொடியில் ஒரு பட்டாம்பூச்சி மறைந்திருக்கிறது. அத 10 வினாடிகளுக்கு கண்டுபிடியுங்கள். அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்!

என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? எல்லாம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறது. என்ன செய்வது, எப்படி கண்டுபிடித்துதான் ஆக வேண்டும். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள், கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இதோ விடையை நாங்களே சொல்கிறோம்.

Optical Illusion Spot the butterfly in Betel leaf plant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+