நீங்க ஜீனியசா? வாங்க டெஸ்ட் பண்ணிடலாம்.. படத்தில் குடை மறைந்திருக்கு.. 10 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் மாயை திரைப்படத்தில் குடை ஒன்று மறைந்து இருக்கிறது. இதனை 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான். என்ன சவாலுக்கு ரெடியா? உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்..
ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் கண்களை நம்மை ஏமாற்ற வைக்கும். கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான்.. அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதன் காரணமாகவே இந்த படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் சவால் மிக்கவையாக இருப்பதாலும் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதால் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.
அது போக தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த இல்யூஷன் படங்களை அனுப்பி அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள்.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உணவகத்திற்கு வந்திருக்கும் நபர்களில் ஒருவர் குடை ஒன்றை வைத்து இருக்கிறார். அந்தக் குடை எங்கே இருக்கிறது என்பதுதான் உங்களுக்கான டாஸ்க்..
அதுவும் வெறும் 10 செக்கண்டில் கண்டுபிடிக்கனும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1,2,3................10. ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட டைமிற்குள் விடையை கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ்தான். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமானதாக உள்ளது. விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் சில டிப்ஸ் தருகிறோம்...
டேபிளில் அமர்ந்து இருப்பவர்களிடம் தான் குடை இருக்கும் என்று நீங்கள் நினைத்து தேடினால்.. கடைசி வரை உங்களால் விடையை கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்களிடம் குடை இல்லை. எனவே, நின்று கொண்டு இருப்பவர்களிடம்தான் குடை உள்ளது. இந்த டிப்ஸ் போதும்.. இப்பவே விடையை கண்டுபிடித்து விடுகிறோம் என நீங்கள் நினைப்பது தெரிகிறது...

பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.. விடையை இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்.. கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் குடை மறைந்து இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை ஒருவரின் கவனிப்புத்திறன், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்றையும் பரிசோதிக்கும் வகையில் அமைந்து இருப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், ஒருவரின் அறிவுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடுகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்றவற்றைக் கூட தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications