இந்த படத்தில் என்ன தெரிகிறது? நீங்கள் உம்முனா மூஞ்சியா? இல்லை லொடலொட வாயா? நாங்கள் சொல்கிறோம்!
சென்னை: நீங்கள் தனிமையை விரும்புவீர்களா, இல்லை வாயை திறந்தாலே மூடாமல் பேசிக் கொண்டே இருந்து ஊரெல்லாம் தோழமையுடன் இருப்பீர்களா என்பதை ஒரு படத்தை வைத்தே நாங்கள் சொல்லிவிடுவோமே!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி? குழப்பம் ஏற்படுமோ அப்படித்தான் இவைகளும்.

கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. தற்போது மூளைக்கு வேலை கொடுக்கும் பசில்களை பார்க்கலாம். பசில் என சொல்வதை வித ஆளுமையை கண்டறிவது என சொல்லலாம்.
அதாவது ஒரு படத்தை கொடுத்துள்ளோம். அதில் நீங்கள் முதலில் எதை பார்க்கிறீர்கள் என சொன்னால், அதை வைத்து நீங்கள் இன்ட்ரோவெர்ட்டா , இல்லை எக்ஸ்ட்ரோவெர்ட்டா என்பதை சொல்லிவிடுவோம். அதாவது இன்ட்ரோவெர்ட் என்றால் தனிமையில் இனிமை காண்பது, யாரிடமும் பேசாமல் இருப்பது, பேச கூச்சப்படுவது என சொல்லலாம். சுருக்கமாக சொல்வதென்றால் reserved type.
இதே எக்ஸ்ட்ரோவெர்ட் என்றால் ஊரில் உள்ளவர்கள் எல்லாரிடமும் நட்பு பாராட்டுவது, பேசிக் கொண்டே இருப்பதுதான். நாங்கள் கொடுத்த படத்தில் நீங்கள் முதலில் பெண்ணின் உருவத்தை பார்த்தால், நீங்கள் இன்ட்ரோவெர்ட். அமைதியான சூழலை விரும்புவீர்கள். யாருடனும் அவ்வளவு எளிதில் ஒற்று போக மாட்டீர்கள். நீங்கள் புத்திசாலிகளாக இருப்பீர்கள். அதே நேரத்தில் உணர்ச்சிகரமானவர்களாகவும் இருப்பீர்கள்.
ஒரு வேளை நீங்கள் பார்த்தது நரம்புகளாக தெரிந்தால் நீங்கள் அடி தூள்தான். ஊரெல்லாம் பேசி பேசியே நட்பு வட்டாரத்தை பெரிதாக வைத்துக் கொள்வீர்கள். ரிசர்வ்டு டைப் நண்பர்கள் கிடைத்தாலும் நீங்கள் அவர்களையும் நன்றாக பேச வைத்துவிடுவீர்கள். எத்தனை நட்பு வட்டாரங்கள் இருந்தாலும் புதிது புதிதாக நட்புகளை உருவாக்க முயன்றுக் கொண்டே இருப்பீர்கள். தைரியமானவர்களாக இருப்பீர்கள். எதுவாக இருந்தாலும் பயமின்றி உரக்க சொல்வீர்கள். இப்போது சொல்லுங்கள் நீங்கள் எதை பார்த்தீர்கள். இதை படித்துவிட்டு மாற்றி எல்லாம் சொல்லக் கூடாது. போங்காட்டம் ஆடக் கூடாது!












Click it and Unblock the Notifications