படத்தில் முதலில் என்ன தெரிகிறது? படகா? சுறா மீனா?.. உங்க கேரக்டரை தெரிஞ்சுக்க சூப்பர் டெஸ்ட்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சுறா மீன் தெரிகிறதா? இல்லை படகு தெரிகிறதா? என்பதை வைத்து உங்கள் குணாதிசயங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்று சொல்லப்படும் ஒளி மாயை படங்கள் இணையதளத்தில் தற்போது அதிகம் பிரபலம் ஆகி வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக இந்த இல்யூஷன் படங்கள் பகிரப்படுகின்றது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பொதுவாக நமது மூளைக்கு வேலை வகையில் அமைந்து இருக்கும். அதாவது, கவனிப்புத்திறன், நாம் ஒரு படத்தை எந்த கோணத்தில் பார்க்கிறோம் என்பதை வைத்தே இதற்கான விடைகளை கண்டுபிடிக்க முடியும்.

இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தங்களுக்கு சவாலாகவும் புதிர் போடுவதாகவும் இருக்கிறது என்பதால் இதை பலரும் ஆர்வமுடன் தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்தும் வருகின்றனர். அறிவுத்திறனுக்கு சவால் விடுக்கும் வகையில் இருப்பதாலும், நமது குணாதிசியங்களை அறிந்து கொள்ளவும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகின்றன என்று சொல்லலாம்.
இன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தை நாம் பார்க்கும் போது முதலில் உங்களுக்கு சுறா மீன் தெரிகிறதா? அல்லது படகு தெரிகிறதா? என்பது தான். சுறா மீன் தெரிந்தால் நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும், எந்த மாதிரியான குணாதிசயங்களை கொண்டிருப்பீர்கள் என்றும் தெரிந்து கொள்ளலாம். படகு தெரிந்தால் உங்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்றும் இங்கே பார்க்கலாம்.
சுறா மீன் தெரிந்தால்: உங்கள் கண்ணுக்கு முதலில் சுறா மீன் தெரிந்தால் உங்கள் வேலைகளுக்காக யாரையும் நீங்கள் சார்ந்திருப்பதை விரும்ப மாட்டீர்கள். தன்னிச்சையாகவே எவ்வளவு பெரிய வேலை என்றாலும் முடிக்க விரும்புவீர்கள். உங்களின் இந்த குணம் தான் எதிர்கால வெற்றிக்கும் அடிப்படையாக இருக்கும்.
உங்களின் பொறுப்புணர்வு மற்றும் தரமான செயல்பாடுகளால் சாதனைகளை நிகழ்த்த அனைத்து தகுதிகளையும் கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். உங்களின் இலக்குகள் எப்படியிருந்தாலும் அதை அடைந்தே தீர வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் உங்களிடம் எப்போதும் இருக்கும்.
படகு தெரிந்தால்: இந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் கண்ணுக்கு கடலில் செல்லும் படகுதான் முதலில் தெரிந்தது என்றால் உங்கள் குணாதிசயங்கள் கீழ் கண்டவாறு இருக்க சான்ஸ் உள்ளது. நீங்கள் எப்போதுமே உயர்ந்த லட்சியம் கொண்டவராக இருக்கலாம். எனினும், உங்கள் இந்த லட்சியத்திற்கு சூழல்நிலை குறுக்கீடாக அமையலாம்.
புதிய விஷயங்களை அணுகுவதற்கு எப்போதும் உங்களிடம் ஒரு தயக்கம் இருக்கும். எப்படியாவது வாழ்க்கையில் ஒரு உயரிய இடத்தை எட்டிவிட வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் உங்களிடம் இருந்து கொண்டே இருக்கும். இந்த எண்ணம்தான் உங்களின் லட்சியத்தை எட்டுவதற்கான முக்கிய பங்கை வகிக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications