Optial Illusion: பாறைகளில் மறைந்திருக்கும் எழுத்துகளை கண்டுபிடியுங்கள்! வெறும் 15 செகண்டில்!
சென்னை: பாறைகளில் மறைந்திருக்கும் செய்தியை வெறும் 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா, அப்படி முடிந்தால் நீங்கள் அறிவாளி. என்ன முயற்சி செய்து பார்க்கிறீர்களா?
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தை இணையதளத்தில் நிறைய குவிந்து காணப்படுகின்றன. இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்க்கும் ஒரு காட்சியை பார்க்கும் போது அதை எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறீர்கள் என்பதை சோதிக்கிறது.

உங்கள் புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்க எளிமையான முறையாகும். பொதுவாக நமக்கு தேடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேட வேண்டும் என்றால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.
இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை குழப்பி முழியை பிதுங்க வைக்கும். விடையை கண்டுபிடித்துவிட்டால் உங்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் போகும். அந்த அளவுக்கு காலரை தூக்கிவிட்டு கொள்வீர்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷனை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ்.
சும்மா டிரை செய்து பாருங்கள். ரொம்ப ஆர்வமாக இருக்கும். இந்த படத்தில் நிறைய பாறைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மறைந்திருக்கும் செய்தியை நீங்கள் 15 வினாடிகளில் படித்தால் நீங்கள் அறிவாளி. என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? எளிதாக இருக்கிறதா? சட்டு புட்டுனு விடையை சொல்லுங்கள் பார்ப்போம்.
இந்த புதிருக்கு பலருக்கும் விடை தெரியாமல் இருக்கிறது. இதனால் மண்டையை பிய்த்து கொள்கிறார்கள். இந்த பாறையில் என்ன எழுதி இருக்கிறது தெரியுமா, அதை நாங்கள் மேற்கோள் காட்டியுள்ளோம். இந்த பாறைகள் உங்களை அழ வைக்கும் என்பதை ஆங்கிலத்தில் THE STONES WILL CRY OUT என எழுதப்பட்டிருக்கிறது.
இதை கண்டுபிடிக்க குறுக்கு வழி என்ன தெரியுமா, பொதுவாக இது போல் மறைந்திருக்கும் எழுத்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் இரு வழி இருக்கிறது. ஒன்று கண்ணை வேகமாக மூடி திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அரை கண்களில் அதாவது கண்களை லேசாக மூடிவிட்டு பார்க்க வேண்டும். இப்படி எப்படி பார்த்தாலும் எழுத்துகளை நீங்கள் கண்டறிந்துவிடலாம். என்ன எளிதான விஷயம்தானே! இதை 15 நிமிடங்களில் கண்டுபிடித்துவிட வேண்டும். அதற்கான சாத்தியம் இருக்கிறது.













Click it and Unblock the Notifications