படத்தை பார்த்ததும் என்ன தெரியுது.. மரமா? சிங்கமா? சொல்லுங்க.. உங்க கேரக்டர் இப்படித்தான் இருக்கும்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிவது சிங்கமா இல்லை மரமா? என்று சொல்லுங்கள்.. உங்கள் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை ஓரளவு கெஸ் பண்னிடலாம்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இல்யூஷன் படங்கள் நல்ல பயனுள்ள பொழுது போக்காக உள்ளது. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை நேரடியாக விடைகள் தெரியாது. மேலோட்டமாக பார்த்தால் நம் கண்ணுக்கு ஒரு விஷயம் தெரியும்.
அதையே உற்று பார்த்தால் வேறொரு விஷயம் தெரியும்.

அதாவது, நம் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக அமைந்து இருக்கும். சவாலுக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது அது நம் பார்வை திறன் மற்றும் அறிவு திறனுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும் என்பதால் நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சிலவகை ஆப்டிகல் இல்யூஷன்களை வைத்து ஒருவரது கேரக்டரைக் கூட ஓரளவு கணித்து விடலாம் என்று சொல்கிறார்கள்.
மரமா அல்லது சிங்கமா: அந்த வகையில் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டில் இல்யூஷன் படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள். அதை வைத்து உங்கள் கேரக்டர் எப்படி உள்ளது என்பதை ஓரளவு யூகித்து விடலாம். இந்த படத்தில் மலைப்பகுதி உள்ளது. இந்த படத்தில் மலை முகடுகள், மரம் சிங்கம், என ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு விதமாக தெரிகிறது. உங்களுக்கு முதலில் தெரிவது மரமா அல்லது சிங்கமா என்று சொல்லுங்கள்.. உங்கள் கேரக்டரை ஓரளவு கெஸ் பண்னிடலாம்..
முதலில் மரங்களை பார்த்தால்: இந்த படத்தில் உங்கள் கண்ணுக்கு முதலில் மரங்களின் கிளைகள் தெரிந்தால்.. நீங்கள் தனிமையைதான் அதிகம் விரும்பக் கூடிய நபராக இருப்பீர்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கியிருக்கும். நெகட்டிவ் ஆன எமோஷன்களை புறந்தள்ளுவதில் கடுமையாக போராடுவீர்கள். அதேவேளையில், ஏதாவது ஒரு விஷயத்தில் சறுக்கல் ஏற்பட்டாலும் அடுத்த நொடியே அதில் இருந்து மீண்டு வரும் ஆற்றல் உங்களுக்கு உண்டும்.
உங்கள் கண்ணுக்கு முதலில் சிங்கம் தெரிந்தால்: நீங்கள் அமைதியை அதிகம் விரும்ப மாட்டீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை கலகலப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். தலைமைப்பண்பு மேலோங்கியிருக்கும். ஆனால், இதுவே சில நேரம் உங்களை பிற நபர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் விதமாக இருக்கும். மற்றவர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications