ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் "கோன் ஐஸ்கிரீம்" எங்கே இருக்கிறது? 5 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் கோன் ஐஸ்கிரீம் எங்கே இருக்கிறது என்று 5 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள், பார்க்கும் நம் கண்களையே ஏமாற்ற வைக்கும். உதாரணமாக, கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது என்றால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்குதான்.. இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

அதுபோக இல்யூஷன் படங்களில் விடைகளை கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கவையாக இருக்கிறது. இதனால் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றது.
இப்படி படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிப்பவர்கள், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் படத்தில் ஐஸ் கிரீம் அதாவது கோன் ஐஸ் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
பிளாக் அண்ட் ஒயிட்டாக கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விளையாட்டு பொம்மைகளை வைத்து சிறுமிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கரடி பொம்மை, நாய் பொம்மை, குதிரை பொம்மைகள் ஆங்காங்கே உள்ளன. இதற்கு மத்தியில் தான் கோன் ஐஸ் ஒன்று மறைந்து இருக்கிறது. என்ன கண்டுபிடிக்க ரெடியாகி விட்டீங்களா? ஓகே உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 4.. 5. ஒகே டைம் ஓவர்.
என்ன கோன் ஐஸ் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா.. 5 செகண்டிற்குள் கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் கோன் ஐஸ் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்பவர்கள் மீண்டும் ஒரு முறை தேடிப்பாருங்கள் கண்டுபிடித்து விடலாம். அப்போதும் தெரியவில்லை என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது.

எப்போதும் போல இதற்கான விடையானது படத்தின் வலதுபுறத்தில் தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் புத்தகங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அலமாரியில் தான் இருக்கிறது. இப்போது எல்லாருமே கண்டுபிடித்து இருப்பீர்கள். அப்படியும் கோன் ஐஸ் கிரீம் இருக்கும் இடம் தெரியவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications