பீச்சில் சன் பாத் எடுத்த சிறுமியின் பிரேஸ்லெட் மாயம்! 7 பேரில் யார் திருடன்? கண்டுபிடிங்க
சென்னை: பீச்சில் ஒரு சிறுமி சன் பாத் எடுக்கும் போது அவருடைய பிரேஸ்லெட்டை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள். யார் திருடிச் சென்றது என்பதை 5 வினாடிகளில் கண்டறிய முடியுமா?
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் பிரெயின் டீசர் விளையாட்டுகள் தற்போது அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் நாம் ஒரு ரிடிலை பார்க்கலாம்.

அதாவது கடற்கரையில் ஒரு சிறுமி குளித்துவிட்டு ரிலாக்ஸாக படுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய விலை உயர்ந்த பிரேஸ்லெட்டை யாரோ திருடி சென்றுவிட்டார்கள். அது யார் என்பதை 5 வினாடிகளுக்குள் கண்டறிய முடியுமா?
அந்த பிரேஸ்லெட் விலை அதிகமானது. இதனால் சிறுமி மனமுடைந்தார். அங்கு 7 பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அந்த பிரேஸ்லெட்டை திருடியுள்ளார்கள். உங்களுக்கு 5 வினாடிகள் நேரம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் திருடனை கண்டுபிடித்து அவரிடம் இருந்து பிரேஸ்லெட்டை வாங்கித் தர வேண்டும்.
யாரெல்லாம் ரெடியாக இருக்கிறீர்கள். உங்கள் நேரம் தற்போது தொடங்கிவிட்டது. 5 வினாடிகளுக்கு மேல் ஒரு வினாடி கூட கூடுதலாக கொடுக்க முடியாது. நேரம் போகிறது, உடனே விடையை சொல்லிவிடுங்கள் பார்க்கலாம். என்ன திருடனை கண்டுபிடித்துவிட்டீர்களா?
சுற்றி பார்த்தால் மணலில் யாருடைய காலடியும் இல்லை. எனவே சிறுமியிடம் வராமல் எப்படி அவருக்கு பக்கத்தில் இருந்த பிரேஸ்லெட்டை திருட முடியும்? ஓகே இதற்கான விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். அந்த 7 பேரில் ஒரு மீனவர் இருக்கிறார். அவர்தான் மீன் பிடிக்கும் தூண்டிலை கொண்டு சிறுமியின் பிரேஸ்லெட்டை திருடியுள்ளார்.

இந்த விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்காதவர்கள் அடுத்த முறை கண்டறிந்துவிடுங்கள். இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இருக்கிறது எனலாம்! உங்கள் புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்க எளிமையான முறையாகும். பொதுவாக நமக்கு தேடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேட வேண்டும் என்றால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.
இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை குழப்பி முழியை பிதுங்க வைக்கும். விடையை கண்டுபிடித்துவிட்டால் உங்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் போகும். நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் அப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன், பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications