"குரூப்ல டூப்" பொம்மை நாய்களுக்கு நடுவே.. நிஜ நாயின் படமும் உள்ளது? எது என்று கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிறைய நாய் பொம்மைகள் உள்ளன. ஆனால் இந்த நாய் பொம்மைகளில் உண்மையாகவே ஒரு நாய் உள்ளது. அந்த அசல் நாய் எது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்..

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பொழுதுபோக்கு நேரத்தில் சவால் மிக்க இல்யூஷன் படங்களை பார்ப்பதில் நெட்டிசன்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Optical illusions Can You Find the Real dog Out Of These 49 Dogs

அதோடு தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் திறனையும் ஜாலியாக சோதித்து பார்க்கிறார்கள். ஒளியியல் மாயை எனப்படும் இந்த படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 49 நாயின் இமேஜ்கள் உள்ளன. இதில் ஒரே ஒரு நாயின் படம் மட்டுமே ஒரிஜினல்.. ஏனைய அனைத்தும் பொம்மை நாய்கள்தான். ...

அந்த அசல் இமேஜ் எது உண்மையை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. 15 செக்கண்ட்தான் டைம் அதற்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3,........... ஒகே டைம் ஓவர்.. உங்களில் பலரும் இந்த படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உண்மையாகவே உங்கள் கவனிப்புத்திறன் அபராமாக உள்ளது. சரி கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து விடையை கண்டுபிடித்துவிடலாம். இங்குள்ள நாயின் இமேஜில் படத்தை நன்கு கவனித்து பாருங்கள்.... இன்னும் எளிதாக ஒரு டிப்ஸ் கொடுப்பது என்றால் இந்த படத்தின் வலது பக்கம் பாருங்கள். அங்கு தான் உங்களுக்கான விடை மறைந்துள்ளது. இப்பவும் கண்டுபிடிக்காதவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்.

Optical illusions Can You Find the Real dog Out Of These 49 Dogs

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை வைத்து கண்டுபிடித்து விடலாம். பொதுவாகவே இல்யூஷன் படங்களை அடிக்கடி பார்த்து பழக்கம் உள்ளவர்கள் எளிதாக விடையை கண்டுபிடித்து விடுவதுண்டு. இதனால் அடிக்கடி இத்தகைய இமேஜ்களை பார்த்து பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதாக கண்டுபிடித்து இருப்பார்கள் என்பதே எதார்த்தான உண்மை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+