ஆரஞ்சு அலர்ட்டே கொடுத்துட்டாங்க.. 4 மாவட்டங்களுக்கு பறந்த மிக கனமழை எச்சரிக்கை! 8 மாவட்டங்கள் கவனம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவவதாலும் இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 10 ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 11 ஆம் தேதி மற்றும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மரக்காணம் (விழுப்புரம்) 19, செய்யூர் (செங்கல்பட்டு) 13, மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு) 12, திண்டிவனம் (விழுப்புரம்) 9, செஞ்சி (விழுப்புரம்) 7, வானூர் (விழுப்புரம்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 6, RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), குன்னூர் PTO (நீலகிரி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), குன்னூர் (நீலகிரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), காரைக்கால் (காரைக்கால்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கே.எம்.கோயில் (கடலூர்), ராஜபாளையம் (விருதுநகர்), ஊத்து (திருநெல்வேலி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 4, மாஞ்சோலை (திருநெல்வேலி), RSCL-2 கெடார் (விழுப்புரம்), செய்யார் (திருவண்ணாமலை), மதுக்கூர் (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), லால்பேட்டை (கடலூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), கொடுமுடி (ஈரோடு), அரூர் (தர்மபுரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), பெலாந்துறை (கடலூர்), காக்காச்சி (திருநெல்வேலி), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), பூதலூர் (தஞ்சாவூர்), புதுச்சேரி (புதுச்சேரி), BASL முகையூர் (விழுப்புரம்), கின்னக்கோரை (நீலகிரி), கொத்தவாச்சேரி (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), திருவாரூர் (திருவாரூர்), மீ மாத்தூர் (கடலூர்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), விழுப்புரம் (விழுப்புரம்), வேப்பூர் (கடலூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 3, சுத்தமல்லி அணை (அரியலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), குருவாடி (அரியலூர்), கோடநாடு (நீலகிரி), ஏற்காடு (சேலம்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), வடகுத்து (கடலூர்), அரியலூர் PTO (அரியலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), மணல்மேடு (மயிலாடுதுறை), பொன்னை அணை (வேலூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), விருதாச்சலம் (கடலூர்), கேத்தி (நீலகிரி), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), கோத்தகிரி (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), வனமாதேவி (கடலூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பாண்டவரடி (திருவாரூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), காட்பாடி (வேலூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), வல்லம் (தஞ்சாவூர்), சிவகிரி (தென்காசி), மேலாலத்தூர் (வேலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), குந்தா பாலம் (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்), தென்காசி (தென்காசி), அம்முண்டி (வேலூர்), திருமானூர் (அரியலூர்), கமுதி (ராமநாதபுரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பண்ருட்டி (கடலூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), வேலூர் (வேலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), குருங்குளம் (தஞ்சாவூர்), குடியாத்தம் (வேலூர்), புவனகிரி (கடலூர்), எடப்பாடி (சேலம்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), கடம்பூர் (தூத்துக்குடி), வலங்கைமான் (திருவாரூர்), கீழச்செருவை (கடலூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 2, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), தாம்பரம் (செங்கல்பட்டு), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), தலைவாசல் (சேலம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), கமுதி ARG (ராமநாதபுரம்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), காட்டுமயிலூர் (கடலூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), கோடியக்கரை (மயிலாடுதுறை), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கரம்பக்குடி (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), உதகமண்டலம் (நீலகிரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), சங்கரன்கோயில் (தென்காசி), திருவாலங்காடு (திருவள்ளூர்), திருவையாறு (தஞ்சாவூர்), கடனா அணை (தென்காசி), போளூர் (திருவண்ணாமலை), கரியகோவில் அணை (சேலம்), தம்மம்பட்டி (சேலம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கொடவாசல் (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), காரியாப்பட்டி (விருதுநகர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), பொன்னேரி (திருவள்ளூர்), எமரால்டு (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), அவலாஞ்சி (நீலகிரி), பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), கொரட்டூர் (திருவள்ளூர்), சண்முகாநதி (தேனி), பாரூர் (கிருஷ்ணகிரி), மண்டலம்2 மீனம்பாக்கம் (சென்னை), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), அமராவதி அணை (திருப்பூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), இளையாங்குடி (சிவகங்கை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), மன்னார்குடி (திருவாரூர்), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), கெத்தை (நீலகிரி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அண்ணாமலை நகர் (கடலூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), கடல்குடி (தூத்துக்குடி), அடவிநயினார் அணை (தென்காசி), சென்னிமலை (ஈரோடு), கடலூர் (கடலூர்), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), ஆண்டிபட்டி (தேனி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), தொழுதூர் (கடலூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), தர்மபுரி PTO (தர்மபுரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), எறையூர் (பெரம்பலூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications