Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நாட்டு நாட்டு” பாடலின் அடுத்த “ரெக்கார்ட்”.. எது 1,105 மடங்கா? கூகுளில் தேடி தள்ளும் உலக மக்கள்

ஆன்லைனில் இருக்கும் உலக மக்களுக்கு நாட்டு நாட்டு பாடல் மீதான ஆர்வம் அதிகரித்து இருப்பதை இது காட்டுகிறது. குறிப்பாக ஆஸ்கர் விருது வென்ற அடுத்த சில மணி நேரங்களில் அதன் தேடல் பெருகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் வெளியான "நாட்டு நாட்டு" பாடலுக்காக அதன் இசையமைப்பாளர் கீரவாணி சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்று இருக்கும் நிலையில், இது வரை இல்லாத அளவுக்கு அந்த பாடலை கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கை 1,105 மடங்கு அதிகரித்து சாதனை படைத்து உள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோரை வைத்து இயக்குநர் ராஜமவுலி இயக்கிய திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பேன் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர். அகில இந்திய அளவிலும், பல உலக நாடுகளிலும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் கோல்டன் கிளோப் விருதை வென்று அசத்தியது.

ஆஸ்கர் வென்ற கீரவாணி

ஆஸ்கர் வென்ற கீரவாணி

இந்த பாசல் ஆஸ்கர் விருதையும் விரைவில் வெல்லும் என்று பலரும் தெரிவித்து வந்தனர். அதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் விருதை வென்றுள்ளது நாட்டு நாட்டு பாடல். இந்த விருதை அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

கூகுள் தேடல்

கூகுள் தேடல்

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். ஏற்கனவே கூகுகுளிலும் யூடியூபிலும் நாட்டு நாட்டு பாடலுக்காகவும், அதன் நடனம் மற்றும் காட்சி அமைப்பை பார்க்கவும் பல கோடிக்கணக்கான மக்கள் அது குறித்து தேடி வந்த நிலையில் ஆஸ்கர் விருது வென்ற பிறகு அது பன்மடங்கு பெருகியுள்ளது.

ரிஹானா, லேடி காகா

ரிஹானா, லேடி காகா

தலைசிறந்த உலக இசை கலைஞர்களான லேடி காகா, ரிஹானா போன்றவர்களின் லைக்குகளை பெற்ற நாட்டு நாட்டு பாடலின் நடனமும், துள்ளலான இசையமைப்பும் சாதாரண மனிதரையும் குத்தாட்டம் போட வைக்கும் அளவுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. அதன் காரணமாகவே உலக ரசிகர்கள் அதில் லியித்து இருக்கிறார்கள்.

ஈர்த்தது எப்படி

ஈர்த்தது எப்படி

குறிப்பாக டிக் டாக்கில் 5.2 கோடிக்கும் அதிகமான மக்கள் இதை பார்வையிட்டு இருக்கிறார்கள். ஆஸ்கர் விருது விழா மேடையில் அதன் பாடலுக்கு ஆடிய நடனம் உலக ரசிகர்களை ஈர்த்து அதை தேட வைத்து இருப்பதாக ஜப்பான் நிறுவனம் கூறி இருக்கிறது. 95 வது ஆஸ்கர் விருது விழாவில் விருது பெறும் முழு தகுதி நாட்டு நாட்டுக்கு உள்ளது என அந்த நிறுவனம் கூறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+