ott | Chiraiya வெப் தொடரில் வந்த முதலிரவு காட்சி.. சின்மயி வெளியிட்ட போல்டான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள இந்த 'சிரையா' (Chiraiya) தொடர், நம் சமூகத்தில் "முதலிரவு" மற்றும் "தாம்பத்தியம்" என்ற பெயரில் நடக்கும் வற்புறுத்தல்களைத் தோலுரித்துக் காட்டும் வகையில் இருக்கிறது. இதில் தொடரை பார்த்த ஆண்கள் ஒரு குறிப்பிட்ட காட்சியை ஆதரித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் நேதா சர்மா என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிராயா ( Chiraiya ) வெப் சீரிஸில் வரும் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சியை ஆதரிக்கும் ஆண்களுக்கு எதிராக மிகக் காட்டமான உண்மைகளைப் பதிவு செய்துள்ளார்.

நேதா சர்மா கூறும் போது," Chiraiya தொடரில் வரும் அந்தக் காட்சியை (திருமண உறவில் நடக்கும் வன்புணர்வு) நியாயப்படுத்திப் பேசும் ஆண்களுக்குப் பெண்ணின் உடல் பற்றி எதுவுமே தெரியவில்லை.

Web Series Chiraiya

பெண்ணின் விருப்பமோ, பாலியல் உணர்வோ தூண்டப்படாத நிலையில், அவளது உடலில் இயற்கையான சுரப்புகள் இல்லாமல் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது என்பது சித்திரவதைக்குச் சமம். இது பெண்ணின் பிறப்புறுப்பில் கிழிசல்களை உண்டாக்கும், கடுமையான வீக்கம் மற்றும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள தசைநார்களில் நிரந்தர பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம்.
திருமணம் என்பது ஒரு பெண்ணின் உடலைச் சிதைப்பதற்கான உரிமம் அல்ல. 'வேண்டாம்' (NO) என்றால் அதற்கு 'வேண்டாம்' என்றுதான் அர்த்தம் . NO MEANS NO என்று காட்டமாக கூறியிருந்தார்."

நேதா சர்மா சொல்வது மருத்துவ ரீதியாக முற்றிலும் உண்மை. பெண்ணின் உடல் தயாராக இல்லாதபோது வற்புறுத்தினால், அது வெறும் மன ரீதியான பாதிப்பு மட்டுமல்ல, உடல் ரீதியாகப் பெரிய காயங்களையும் ரத்தப் போக்கையும் உண்டாக்கும் என்பதை அறிவியலும் நிரூபிக்கிறது. "கல்யாணம் ஆயிடுச்சுல்ல, அப்புறம் என்ன சம்மதம்?" என்று கேட்கும் ஆண்களின் மனநிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை நேதா சர்மா அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.

Web Series Chiraiya

இந்த கருத்தை ஆதரிக்கும் வகையில் பிரபல பின்னணி பாடகி சின்மயி வெளியிட்ட பதிவில், "வன்புணர்வு சார்ந்த ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆண்களுக்கு - இது (திருமண உறவில் நடக்கும் வன்புணர்வு) அவர்களின் கனவு நனவானது போன்றது.

இதனால்தான் திருமண உறவில் நடக்கும் வன்புணர்வு என்பது ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை; மேலும் திருமணமான ஒரு பெண் எப்போதும் உடலுறவுக்குத் தயாராக இருக்க வேண்டும் (என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்). அவள் 'வேண்டாம்' என்று சொன்னால், அதிலும் குறிப்பாக ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவோ அல்லது நெருக்கமாவதற்கோ போதிய அவகாசம் இல்லாத 'அரேஞ்சுடு மேரேஜ்' சூழலில் - ஒரு ஜோதிடர் குறித்த 'முஹூர்த்தத்தில்' உடலுறவு கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதைப் பற்றித்தான் நாம் பெரிய அளவில் விவாதிக்க வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் நீங்கள் இன்னும் தயாராக இல்லை மக்களே." இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்

இன்னும் தெளிவாக கூறுவது என்றால், ஆபாசப் படங்களைப் பார்த்து வளர்ந்த பல ஆண்கள், பெண்களை ஒரு மனிதராகப் பார்க்காமல் ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் மனநிலையைப் பெறுகிறார்கள். குறிப்பாக "வன்புணர்வு" சார்ந்த ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் பெண்ணின் மறுப்பை (No) ஒரு சவாலாகவோ அல்லது விளையாட்டாகவோ எடுத்துக்கொண்டு வற்புறுத்துகிறார்கள் என்பது சின்மயியின் குற்றச்சாட்டு.

கலாச்சாரம், சம்பிரதாயம், ஜோதிடம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் உடல் சார்ந்த உரிமையை பறிக்காதீர்கள். ஒரு பெண் 'வேண்டாம்' என்று சொன்னால், அது திருமணத்திற்குப் பிறகும் 'வேண்டாம்' தான்.. இந்த கருத்தை தான் நேதா சர்மாவும், சின்மயியும் கூறுகிறார்கள்.

அதேநேரம் நமது நாட்டில் ஒரு கணவன் தனது மனைவியின் சம்மதம் இல்லாமலோ அல்லது அவருக்கு விருப்பம் இல்லாமலோ உடலுறவு கொண்டால், அதைச் சட்டம் 'வன்புணர்வு' என்று வகைப்படுத்தாது. அந்தப் பெண்ணின் வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. இந்த சட்டம் பிரிட்டீஸ் காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்னமும் மாறவில்லை..

மத்திய அரசு தரப்பு வாதங்களின் படி, உடலுறவை வன்புணர்வு என்று சட்டப்பூர்வமாக அறிவித்தால், அது "திருமணம்" எனும் புனிதமான கட்டமைப்பைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. கணவன்-மனைவி இடையேயான தனிப்பட்ட விவகாரங்களில் சட்டம் நுழைந்தால், அது விவாகரத்துகள் அதிகரிக்கவும், குடும்பங்கள் உடையவும் வழிவகுக்கும் என்பது அரசின் வாதமாக உள்ளது

அதேபோல் பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள் (உதாரணத்திற்கு 498A - வரதட்சணை கொடுமைச் சட்டம்) சில நேரங்களில் ஆண்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் உள்ளன. அதேபோல், "சம்மதம் இல்லை" என்பதை நிரூபிப்பது ஒரு மூடிய அறைக்குள் நடக்கும் விஷயம் என்பதால், பழிவாங்கும் நோக்கத்தில் கணவன் மீது பொய்ப் புகார்கள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அஞ்சுகிறது. அதுவும் ஒரு காரணம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+