கசப்பா இருந்தாலும் அது சஞ்சீவினி மருந்து! ‘தர்மம்’ மீண்டும் ‘விஸ்வரூபம்’.. சபதம் எடுத்த ஓபிஎஸ் மகன்!
தர்மத்தின் வழியில் செயல்படும் தலைவரின் செயல்கள் ஒரு சில மனிதர்களுக்கு தற்காலிகமாக கசப்பு மருந்து போல் தெரியலாம். ஆனால் அதுதான் நிரந்தர சஞ்சீவினி மருந்தாக இருக்கும் என்பதே உண்மை.
சென்னை : "தர்மத்திற்கு சோதனை வரலாம். ஆனால் வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை எங்களது முயற்சிகள் தொடரும்" என ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றுள்ளார்.
பொதுக்குழுவே வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த தென்னரசு.

ஈரோடு கிழக்கு பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி தனித்தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்தன. அதன்படி இரு அணியினரும் தனித்தனியாக தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார். அதிமுக சார்பாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

பொதுக்குழு முடிவு
அந்த மனுவில் தங்கள் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கையை அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மேற்கொண்டார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோருக்கு ஒப்புகை கையெழுத்து பெற சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தென்னரசுவிற்கு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

ஒருதலை பட்சமாக
பொதுக்குழு உறுப்பினர்கள் 92 சதவிகிதம் பேரின் ஆதரவு தென்னரசுவிற்கு கிடைத்திருக்கிறது. இந்த ஒப்புதல் கடிதம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த வேட்பாளர் தென்னரசுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், செந்தில் முருகன் பெயரைக் குறிப்பிடாமல் தென்னரசு பெயரை மட்டும் குறிப்பிட்டு அவைத்தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டியது. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் கூறப்பட்டது.

செந்தில் முருகன் வாபஸ்
இந்நிலையில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றிருக்கிறார். இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தாலும் செந்தில் முருகன் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஓபிஎஸ் அணி பின்வாங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் இளைய மகன்
இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தலைவன் (உலகநீதி) என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதில், "தனது வாழ்க்கையை சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு தர்மத்தின் வழியில் எண்ணம் - சொல் - செயல் இம்மூன்றையும் ஒரே நேர்கோட்டில் செயல்படுத்துபவர் தான் உண்மையான தலைவர். அப்படி தர்மத்தின் வழியில் செயல்படும் தலைவரின் செயல்கள் ஒரு சில மனிதர்களுக்கு தற்காலிகமாக கசப்பு மருந்து போல் தெரியலாம். ஆனால் அதுதான் நிரந்தர சஞ்சீவினி மருந்தாக இருக்கும் என்பதே உண்மை.

தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்
ஜெயலலிதா ஒருவர்தான் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முழுமையாக அறிந்து அவருடைய திறமையை விசுவாசத்தை உழைப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர். அப்படிப்பட்ட நீதி தேவதை தற்போது இல்லையே என்பதை நினைக்கும் போது மனம் கலங்குகிறது. தர்மத்திற்கு சோதனை வரலாம். ஆனால் வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை எங்களது முயற்சிகள் தொடரும்...
கழக உண்மை தொண்டன்
வி.ப.ஜெயபிரதீப்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications