நம்ம புத்தாண்டு ஏப்ரல் 14..பாரம்பரியமாக உற்சாகமாக கொண்டாடுங்கள்..நமீதா வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய புத்தாண்டு டிசம்பர் 31 கிடையாது ஏப்ரல் 14ஆம் தேதிதான் என்று நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா கூறியுள்ளார். நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை பின்பற்றி தமிழ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார் நமீதா.

காலம் காலமாக ஏப்ரல் 14 சித்திரை முதல்நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சில காரணங்களைச் சுட்டிக் காட்டி தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

Our new year is April 14 Celebrate with traditional enthusiasm Actress Namitha wishes

அதன் பின் மீண்டும் அதிமுக அரசு பதவிக்கு வந்ததும், ஆட்சியாளர்கள் 2011இல் தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தை 1ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என சொல்லாமல் சொல்லியுள்ளது. தை பொங்கலுக்கு கொடுக்கப்படும் பரிசு பொருட்கள் அடங்கிய பையில் 'இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

Our new year is April 14 Celebrate with traditional enthusiasm Actress Namitha wishes

இந்த நிலையில் நமீதா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், டிசம்பர் 31 நமது புத்தாண்டு கிடையாது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு நேரத்தில் நாம் நண்பர்கள் உறவினர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுகிறோம். அது நமது கலாச்சாரம் அல்ல. நாம் இந்தியர்கள் நமது இந்திய நாட்டில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுதான் நமது தமிழ் புத்தாண்டு என்றும் நமீதா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று நாம் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு கோவிலுக்கு போய் இறைவனின் ஆசியை பெற வேண்டும். வீட்டில் பெற்றோர்கள், மூத்தவர்களின் ஆசியை பெற வேண்டும். புத்தாண்டு தினத்தன்று நாள் முழுவதும் குடும்பத்தோடும் உறவினர்களோடும் இணைந்து தமிழ் புத்தாண்டினை கொண்டாடுங்கள் அதுதான் நமது கலாச்சாரம், பாரம்பரியம். எல்லோரும் ஏப்ரல் 14 ஆம் தமிழ் புத்தாண்டினை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுங்கள் எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வணக்கம் என்றும் நமீதா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+