அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. இனி பழைய ஓய்வூதியம் வர வாய்ப்பே இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தகுதியுள்ள ஓய்வூதியதாரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இதுவரை 1.18 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், 2026 ஜூலை 19 ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, மொத்தம் 1,18,195 பேர் யுபிஎஸ் திட்டத்தை தேர்வு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதில் புதிதாக பணியில் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே ஓய்வுபெற்ற தகுதியுள்ள நபர்கள் அடங்குவர்.

Pension

UPS திட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு உறுதியான மாத ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஒரு விருப்பத் தேர்வாக 2025 ஜனவரி 24 அன்று இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 2025 ஏப்ரல் 1 முதல் இத்திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருந்த ஊழியர்கள், தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், அரசின் செலவினம் மற்றும் பங்களிப்பு முறையை பாதிக்காத வகையில் இந்த புதிய ஓய்வூதியக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டது.

ஊழியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்த மத்திய அரசு, இத்திட்டத்தை தேர்வு செய்வதற்கான கடைசி தேதியை 2025 நவம்பர் 30 வரை நீட்டித்து அவகாசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் யார் யாரெல்லாம் இணைய தகுதி படைத்தவர்கள்?

UPS திட்டமானது தற்போது பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, குறிப்பிட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது:

புதிய நியமனங்கள் மற்றும் தற்போது பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள். NPS திட்டத்தின் கீழ் 2025 மார்ச் 31 அல்லது அதற்கு முன்னர் ஓய்வு பெற்ற அல்லது பணிநிறைவு பெற்ற முன்னாள் ஊழியர்கள் (குறைந்தது 10 ஆண்டுகள் வழக்கமான பணி முடித்திருக்க வேண்டும்). தகுதிவாய்ந்த, காலமான முன்னாள் ஊழியர்களின் சட்டப்பூர்வ வாழ்க்கைத் துணைவர்கள்.

UPS திட்டத்தின் முக்கிய நன்மைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், UPS திட்டத்தின் கீழ் பல்வேறு நன்மைகளை நிதியமைச்சகம் விரிவுபடுத்தியுள்ளது:

கிராஜுவிட்டி பலன்கள்

மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள் 2021-ன் கீழ், ஓய்வூதிய கிராஜுவிட்டி மற்றும் இறப்பு கிராஜுவிட்டி நன்மைகள் UPS தேர்வு செய்த ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

சிறப்புச் சூழல்களில் கூடுதல் பாதுகாப்பு:

பணியின் போது ஒரு ஊழியர் மரணமடைந்தாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ, அவர் CCS (Pension) Rules, 2021 அல்லது CSS (Extraordinary Pension) Rules, 2023 ஆகியவற்றின் கீழ் சலுகைகளைப் பெற தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வரி விலக்குச் சலுகைகள்

NPS திட்டத்திற்கு வழங்கப்படும் அதே வரி சலுகைகள் மற்றும் வரி விலக்கு முறைகள் UPS திட்டத்திற்கும் முழுமையாகப் பொருந்தும் என நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

NPS-க்கு திரும்பும் வாய்ப்பு:

UPS திட்டத்திற்கு மாறிய ஊழியர்களுக்கு, மீண்டும் NPS திட்டத்திற்கே திரும்புவதற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

UPS திட்டம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா அல்லது அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சகம், இத்திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் தான் நடைமுறைக்கு வந்துள்ளதால், இதுவரை இதன் செயல்பாடுகள் குறித்து எந்த மறுஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்று விளக்கியுள்ளது.

மேலும், தற்போது வரை யுபிஎஸ் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவோ அல்லது அதற்கு பதிலாக புதிய திட்டத்தைக் கொண்டு வரவோ அரசிடம் எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட வாய்ப்பே இல்லை என்று உறுதியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+