டாப் கியர் போட்டு மேலே வரும் திமுக.. இணைகிறார் ஓவைசி.. வரும் 6ம் தேதி கூட்டத்தில் பங்கேற்பு
சென்னை: சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இதயங்கள் இணைப்போம் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி பங்கேற்கிறார். இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரி 6-ஆம் தேதி திமுகவின் சிறுபான்மை நல பிரிவு சார்பில 'இதயங்களை இணைப்போம்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய இயக்க தலைவர்கள், உலாமாக்கள் பங்கேற்க உள்ளனர்.

மஸ்தான் அழைப்பு
இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனரும், ஹைதராபாத் லோக்சபா தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசியை திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் மாநிலச் செயலாளர் மஸ்தான் இன்று சந்தித்துப் பேசினார்.

பங்கேற்கிறார்
இந்தச் சந்திப்பில் 'இதயங்களை இணைப்போம்' என்ற திமுகவின் மாநாட்டிற்கு வருகை தருமாறு திமுக சார்பில் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஓவைசி அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் பங்களிப்பு
இதுவரை தமிழக அரசியலில் ஓவைசியின் பங்கு பெரிய அளவில் இருந்தது இல்லை. பீகார் அரசியலில் ஓவைசி ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நபராக மாறி உள்ளார். திமுக மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் இதன்மூலம், தமிழக அரசியலிலும் ஓவைசியின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரும்பி பார்க்க வைத்த ஓவைசி
அண்மையில் பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐந்து இடங்களில் ஓவைசியின் கட்சி வெற்றிபெற்றது. பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்புகள் பறிபோக ஓவைசி முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில அண்மையில் ஓவைசி அளித்த பேட்டியில், திமுகவுடன் கூட்டணியில்சேர விரும்புவதாக கூறியிருந்தார். இந்த சூழலில் திமுக சிறுபான்மை நல பிரிவின் மாநாட்டில் கலந்துகொள்ள சம்மதித்து இருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications