ரெடியான ஆக்சிஜன் மையங்கள்.. இனி தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளிலேயே உற்பத்தி.. புது நம்பிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் குறைந்து கொண்டே வந்தாலும் இன்னும் சில வாரங்களில் மிகப்பெரிய மூன்றாம் அலை ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இன்னொரு பக்கம் ஏற்கனவே மூன்றாம் அலை தொடங்கிவிட்டது, இனிமேல்தான் இந்தியாவில் கேஸ்கள் அதிகரிக்கும் என்றும் சில மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தயார் நிலை
தமிழ்நாட்டில் தற்போது 3 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தாலும், எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் அலை ஏற்படும் வாய்ப்பு நிலவி வருகிறது. முக்கியமாக லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே அதிக அளவில் செல்ல தொடங்கி உள்ளனர். இது கொரோனா கேஸ்களை அதிகரித்து மூன்றாம் அலைய ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

ஆக்சிஜன்
கொரோனா இரண்டாம் அலையின் போது நாடு முழுக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது. டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் மரணம் அடைந்தனர். அதிலும் உத்தர பிரதேசத்தில் தினமும் பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் மரணம் அடைந்த அவலம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அப்படி அசம்பாவிதம் ஏற்படவில்லை என்றாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது.

கடைசி நொடி
தினமும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக அமைச்சர்கள், எம்பிக்கள் களத்தில் நின்று பல மணி நேரம் உழைத்தனர். ஆக்சிஜன் லாரி வரும் கடைசி நொடி வரும்.. என்ன நடக்குமோ என்ற பதற்றம் தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் நிலவியது. ஆனால் ஓருருவழியாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழ்நாடு அரசு இரண்டாம் அலையின் போது தப்பித்துவிட்டது.

மீண்டும்
இந்த நிலையில் மூன்றாம் அலையின் போது இப்படி பதட்டம் ஏற்பட கூடாது என்பதால் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுக்க இருக்கும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை கட்டி உள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அரசு கட்டி உள்ளது. சென்னை, திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர் என்று பல மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் திறக்கப்பட்டுவிட்டன.

சென்னை
நேற்று சென்னையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மையங்களின் கட்டுமானம் முடிந்து, செயல்பட்டுக்கு வரும் நிலை உள்ளது. இங்கு ஏற்கனவே சிறிய அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானம்
மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனை தொடங்கி கோவை, சென்னையில் இருக்கும் பெரிய பெரிய அரசு மருத்துவமனைகள் வரை பல இடங்களில் உற்பத்தி மையங்கள் கட்டப்பட்டு ஆக்சிஜன் தொடங்கும் நிலை உள்ளது. மூன்றாம் அலை ஏற்பட்டால் ஆக்சிஜனை வெளியில் இருந்து வாங்கி அது தமிழ்நாடு வரும் வரை காத்திருக்க முடியாது. அதற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அரசு அமைத்துள்ளது.

நம்பிக்கை
ஏற்கனவே கடந்த இரண்டாம் அலையின் போதே ஆக்சிஜன் படுக்கைகள் உயர்த்தப்பட்டுவிட்டன. இப்போது ஆக்சிஜன் உற்பத்தி மையங்களும் கொண்டு வரப்பட்டுள்ளதால், மூன்றாம் அலையை தமிழ்நாடு சமாளித்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் போது தினசரி ஆக்சிஜன் தேவை சராசரியாக 270 - 400 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications