ப.சிதம்பரத்தை நியமித்த விஜய்.. ராகுல் காந்தி காதுக்கு போன அந்த விஷயம்.. பரபரக்கும் தமிழக காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப.சிதம்பரத்தின் நியமனம் இப்போது தவெகவுக்குள் பேசுபொருளாகி இருக்கிறது... தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸின் மூத்த தலைவரும் சீனியர் கவுன்சிலுமான ப.சிதம்பரத்தின் நியமனம் சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது.. இந்த விவகாரம் ராகுல் காந்தி வரை எட்டியிருக்கிறது.. இதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசில் காங்கிரஸை சேர்ந்த ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

P Chidambaram

இந்நிலையில், தமிழக அரசின் முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில் பல மூத்த வழக்கறிஞர்களை முதல்வர் விஜய் அண்மையில் நியமித்திருந்தார்.. அந்தவகையில், ப.சிதம்பரத்தை தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞராக நியமிக்க முதல்வர் விஜய் முடிவு செய்தார்.. இந்த தகவலை முன்கூட்டியே சிதம்பரத்திடமே நேரடியாக சொன்னாராம் விஜய்.. இதைக்கேட்டு ப.சிதம்பரம் அளவிலா மகிழ்ச்சியடைந்தாராம்.

ப.சிதம்பரம் நியமனம்

ஆனால், இந்த நியமனம் தொடர்பான தகவலை சிதம்பரம், காங்கிரஸ் மேலிடத்திடம், குறிப்பாக ராகுல்காந்தியிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையாம்.. இந்த விஷயம்தான் இப்போது கட்சிக்குள் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது..

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் நம்மிடம் சொன்னபோது, "தமிழக அரசு சார்பில் சிதம்பரத்தை நியமித்ததற்கான அரசாணை வெளியான பிறகுதான், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த விவகாரத்தை ராகுல்காந்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, "இந்த நியமனம் சிதம்பரம் சாருக்கு முன்கூட்டியே தெரியுமா?" என்று ராகுல்காந்தி கேட்டுள்ளார்.. அதற்கு வேணுகோபால், "எனக்கு தெரியவில்லை" என்று பதிலளித்துள்ளார்.

போட்டு உடைத்த கே.சி.வேணுகோபால்

எனினும் கே.சி.வேணுகோபால் ப.சிதம்பரத்திடமே இந்த விவகாரம் குறித்து நேரடியாக கேட்டுள்ளார்.. அதற்கு "எனக்கே இப்போதுதான் தெரியும்" என்று ப.சிதம்பரம் சொன்னாராம்.

அப்போதும் சந்தேகம் தீராத வேணுகோபால், ப.சிதம்பரத்தின் நியமனத்தின் பின்னணி குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ப்ரவீன் சக்கரவர்த்தியிடம் விசாரித்திருக்கிறார்.. உடனே ப்ரவீன் சக்கரவர்த்தி, முதல்வர் விஜய்யை தொடர்புகொண்டு விவரத்தை கேட்டபோதுதான், சிதம்பரத்தின் அனுமதியுடன்தான் தமிழக அரசு அவரை நியமித்தது தெரியவந்துள்ளது.. உடனே இந்த விஷயத்தை ப்ரவீன் சக்கரவர்த்தி வேணுகோபாலிடம் பாஸ் செய்துள்ளார்..

ராகுல் காந்தி அப்செட்

வேணுகோபால் இந்த தகவலை மீண்டும் ராகுல்காந்தியிடம் தெரிவித்துள்ளார்.. இதைக்கேட்டு சிதம்பரத்தின் மீது வருத்தப்பட்டுள்ளார் ராகுல்காந்தி. அதுமட்டுமல்ல, தலைமைக்கு தெரியாமலே பலரும் விஜய் அரசிடம் நெருங்கத் துடிக்கின்றனர் என்றும் கமெண்ட் செய்தாராம் ராகுல் காந்தி" என்று நம்மிடம் காங்கிரஸ் வட்டாரங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர்கள் நியமனம் ஒருபுறம் இருக்க, தமிழக அரசின் சட்ட விவகாரங்களில் மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரத்தின் பங்கு மறுபுறம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நியமனம் உண்மையில் எந்த அளவுக்கு அரசியல் ரீதியான புரிதலுடன் மேற்கொள்ளப்பட்டது என்பதும், காங்கிரஸ் மேலிடத்துக்கு இதுகுறித்து எப்போது தகவல் சென்றது என்பதும்தான், காங்கிரஸ் கட்சிக்குள் விவாதமாகியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+