ஐயா பிரதமரே.. இந்த 5 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. மோடி சொன்ன “டேட்டா”வை கப்பென பிடித்த ப.சிதம்பரம்!
சென்னை: டிஜிட்டல் பொருளாதாரம் 6 கோடி வேலைகளை உருவாக்கியதாக கூறியது பற்றி பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்று குறிப்பிட்டு 5 கேள்விகளை எழுப்பி உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக 430 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 6, 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி சொன்னது என்ன?: இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து, இந்தியாவில் 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பேச்சு குறித்து டேட்டா கேட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை முன்வைத்துள்ளார் ப.சிதம்பரம்.
ப.சிதம்பரம் பதிவு: ப.சிதம்பரம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என கூறியுள்ளார். பிரதமர் ஒரு தகவலை வெளியிட்டால், அந்த தகவல் தொடர்பான தரவு அவரிடம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது தொடர்பாக சில கேள்விகள்:
ப.சிதம்பரம் முன்வைத்த கேள்விகள்: 1. பிரதமர் தனது கூற்றினை நிரூபிக்கும் வகையிலான தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவாரா?
2. ஏன் 2019 ஆம் ஆண்டுடன் நிறுத்தி விட்டீர்கள்.. 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை என்ன நடந்தது?
3. ஒரு துறையில் மட்டுமே 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்றால் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் மொத்தம் எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன?
4. ஏன் பட்டதாரி இளைஞர்களின் வேலையின்மை 42 சதவிகிதமாக இருக்கிறது? நீங்கள் குறிப்பிடும் டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?
5. 2024 ஆம் ஆண்டு ஐஐடியில் இருந்து படித்து வெளியேறிய பட்டதாரிகளில் 38 சதவிகிதம் பேர் இன்னமும் வேலை ஏன் கிடைக்காமல் இருக்கிறார்கள்? டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஐஐடி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்களா?
என பிரதமர் மோடிக்கு சரமாரியாக கேள்விகளை முன் வைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். பிரதமர் மோடி தெரிவித்த தகவல் எதன் அடிப்படையில் என்ற டேட்டாவை கேட்டுள்ள ப.சிதம்பரம் எழுப்பியுள்ள கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதம் ஆகியுள்ளன. ப.சிதம்பரத்தின் கேள்விகளை குறிப்பிட்டு பலரும், பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications