பிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்

பிரதமர் மோடியை கேலி செய்து விமர்சித்து ப சிதம்பரம் ட்வீட் போட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    P Chidambaram Criticize Modi: பிரதமர் மோடியை நக்கல் அடித்து ப.சிதம்பரம் ட்வீட்- வீடியோ

    சென்னை: "என்னது.. நாட்டில் 5 வருஷமா குண்டுவெடிப்பே நடக்கலையா.. பிரதமருக்கு என்ன ஞாபக மறதியா? யாராவது மோடிக்கு இதை கொஞ்சம் ஞாபகப்படுத்துங்களேன்" என்ற ரீதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியை நக்கல் அடித்து ட்வீட் ஒன்றினை போட்டுள்ளார்.

    எம்பி தேர்தல் பிரச்சாரம் படு சுறுசுறுப்பாக போய் கொண்டிருக்கிறது. போகிற இடங்களில் எல்லாம் தன்னுடைய 5 ஆண்டு கால சாதனைகளை லிஸ்ட் போட்டு சொல்லி வருகிறார் பிரதமர் மோடி. அப்போது இந்திய ராணுவத்தை புகழ்ந்து தள்ளுகிறார்.

    P.Chidambaram tweet about PM Narendra Modi

    "அபிநந்தனை திருப்பி ஒப்படைக்காதிருந்தால், பாகிஸ்தான் கதி என்ன ஆகியிருக்கும் தெரியுமா? இந்தியா அணுகுண்டு வைத்திருப்பது என்ன தீபாவளிக்கு வெடி வெடிக்கவா?" என்றெல்லாம் குஜராத்தில் பிரச்சாரத்தில் பேசினார்.

    அப்போது, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தையும் குறிப்பிட்டு பேசியபோது, "கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டில் எங்குமே ஒரு குண்டு வெடிப்பு சம்பவமும் நடக்கவில்லை" என்றார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் அடித்து ட்வீட் செய்துள்ளார்.

    அதில், "குண்டுவெடிப்பே நடக்கவில்லை என்கிறாரே பிரதமர் மோடி. அவருக்கு ஞாபக மறதியாகி விட்டது போலும். யாராவது அவருக்கு 5 ஆண்டுகளில் நாட்டில் நடந்த இத்தனை குண்டுவெடிப்பு சம்பவங்களையும் ஞாபகப்படுத்துங்களேன்.

    மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 2014-ல் டிசம்பர் 5-ம் தேதி காஷ்மீரின் மோஹ்ரா குண்டுவெடிப்பு, 2015-ல் சத்தீஸ்கரில் தண்டேவாடா, 2016-ல் பாலமு, அவுரங்கபாத், 2017-ல் ஒடிசாவின் கோராபுட், சுக்மா தாக்குதல் முதல் இந்த மாதம் 14-ந் தேதி தண்டேவாடாவில் நடத்தப்பட்ட தாக்குதல் வரை" என ப.சிதம்பத்தின் பட்டியல் அந்த ட்வீட்டில் நீள்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+