Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்களும் உங்க மொழியும்.. குஷ்புவை மிக கடுமையான தொனியில் விமர்சித்த திமுகவின் பத்மபிரியா

Subscribe to Oneindia Tamil

சென்ன: நடிகை குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கேமராக்கள் முன் அழுதபடி பேசிவிட்டு, லைவ் கட்டாகவில்லை என்பது தெரியாமல் அதன் பின் சட்டென பேசி சிரிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இதனை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா நீங்களும் உங்களும் மொழியும் என்று கடுமையாக பதிவினை குஷ்புவின் ட்விட்டிற்கு போட்டுள்ளார்.

திமுகவின் பேச்சாளர்களில் ஒருவராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த முறை ஆளுநர் குறித்து சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கினார். அதற்காக அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார். திமுக கூட்டங்களில் தொடர்ந்து பேசி வந்தார்.

Padma Priya attacks khushbu sundar : Please behave and stop playing fool with your Pseudo Feminism

இந்நிலையில் அண்மையில் திமுக கூட்டம் ஒன்றில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகை குஷ்பு குறித்தும் மிக மோசமாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவினர் மட்டுமின்றி பலரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தன்னை பற்றி பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் அண்மையில் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது குஷ்பு பேசுகையில், "இவர்களுக்கு பெண்கள் பற்றி அவதூறாக பேச அதிகாரம் வழங்கியது யார்? திமுக கருணாநிதி இருந்தபோது இப்படி இல்லை. பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து கருணாநிதியை இவர்கள் அசிங்கப்படுதுகிறார்கள். பெண்கள் பற்றி இழிவாக பேசும் தைரியம் யாருக்கும் வரக்கூடாது. அப்படி வந்தால் திருப்பி அடிப்போம். தேசிய மகளிர் ஆணையம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த இருக்கிறது. எங்கு அடிக்க வேண்டுமோ அங்கு அடித்தால்தான் இவர்களுக்கு புத்தி வரும்" என்று கண்கலங்கியபடி பேசினார்.

நடிகை குஷ்பு பேட்டி அளித்த சில நிமிடங்களிலேயே சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில்தான் குஷ்பு பேட்டியளித்த பின் அவர் செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஷ்பு அழுதபடி பேட்டிக் கொடுத்துவிட்டு , பேட்டி முடிந்த பிறகு ஓரமாக சென்று அமர்ந்து சிரித்தார். லைவ் போய்கொண்டிருப்பது தெரியாமல் குஷ்பு சிரித்தபடி அமரந்த காட்சி அப்படியே தொலைக்காட்சியில் வெளியானது.

இதனை மட்டும் வெட்டி, திமுகவினர் பலரும் குஷ்புவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு மேலும் திமுகவினர் தொடர்ந்து குரைக்கிறார்கள். நன்றி. இந்த நாள் இனிய நாளாகட்டும் என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுகவின் பத்ம பிரியா, குஷ்புவை டேக் செய்து, நீங்களும் உங்கள் மொழியும்.. என்று கடுமையான தொனியில் பதிவிட்டுள்ளார். அத்துடன் பத்ம பிரியா குஷ்புவின் வீடியோவை வெளியிட்டு அந்த பதிவில், " நீங்கள் எதையும் மாற்றவிலலை. ஆனால் உங்களோட நடிப்பு திறமையை நிரூபிச்சிருக்கீங்க. தயவு செய்து உங்களோட போலி பெண்ணியத்துடன் முட்டாள்தனமாக விளையாடுவதை நிறுத்து" என்று காட்டமாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+