Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 நாட்களில் செமயாக வாங்கி கட்டிய பாகிஸ்தான்.. இந்தியாவின் பதிலடி ஆக்‌ஷனால் பலத்த சேதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லையில் கடந்த 4 நாட்களாக அத்துமீறி அடாவடியாக தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு இந்தியா வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது. இந்தியா கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து டிரோன்களை ஏவி தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத கட்டமைப்புகளை இந்தியா தாக்கி அழித்தது. அதேபோல், அந்நாட்டின் வான்பாதுகாப்பு மற்றும் சில வான்படை தளங்களை இந்தியா தாக்கியது. பாகிஸ்தானின் பதிலடி நடவைக்கை அனைத்தையும் இந்தியா முறியடித்தது.

India Pakistan


வாங்கி கட்டிய பாகிஸ்தான்

கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்களை இந்தியா அழிக்க தனது வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ் 400, ஆகாஷ் ஏவுகணை, பராக் 8 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பல்வேறு வகையான டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாகிஸ்தானை பந்தாடியது.

கடந்த 8 - 9 ஆம் தேதிகளில் பாகிஸ்தான், இந்தியாவின் 36 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. லே, ஜம்மு, பதிண்டா உள்ளிட்ட இடங்களை குறிவைத்து 300 - 400 துருக்கி டிரோன்கள் வந்தன. இதில் பெரும்பாலான டிரோன்களை இந்திய படைகள் வானில் வைத்தே சுட்டு வீழ்த்தின. இதற்கு பதிலடியக பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சேதம் அடைந்தன.

பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் பொருட்சேதம்

தொழில் நுட்ப கட்டமைப்புகள், கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு மையம், ரேடார் தளங்கள், ஆயுதங்கள் வைத்து இருக்க கூடிய இடங்கள் என பலவற்றை இந்தியா குறிவைத்து தாக்கியது. கடந்த சில நாட்களாக இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு மிகக்கடுமையான மற்றும் தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்திய விங் கமாண்டர் வியோமிகா சிங் தனது பிரஸ்மீட்டிலும் கூறினார். இந்தியா கொடுத்த பதிலடியால் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கும் என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள்.

தாக்குதல் நிறுத்தம்

எல்லையில் அடாவடியாக பாகிஸ்தான் அத்துமீறி போர்பதற்றத்தை உருவாக்கியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடிக்கு பாகிஸ்தான், இந்தியாவுடன் சண்டைக்கு வந்தது. தானாக வம்புக்கு செல்லாத இந்தியா, ஒருபோதும் வந்த சண்டையை விடாது என்பதை நிரூபிக்கும் விதமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் முயற்சிக்கு தக்க பதிலடி கொடுத்தது.

ஆனாலும் கடந்த 4 நாட்களாக டிரோன், ஏவுகணைகளை வீசி இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களை இந்தியா, துல்லியமாக முறியடித்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீர், குஜரத், ராஜஸ்தான், பஞ்சப்பில் பதற்றமான சூழல் நிலவியது. பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்தது.

இயல்பு நிலை திரும்பியது

அணு ஆயுத பலம் கொண்ட இருநாடுகளும் மோதிக்கொண்டது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் சமாதான முயற்சியால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. நேற்று மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக அறிவித்தது. எனினும், அதன்பிறகும் பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்தது. இரவில் தான் இந்த தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்தியது.

இந்த நிலையில் இன்று காலையில் எல்லை மாநிலங்களின் பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. காலையில் வழக்கம் போல் போக்குவரத்து சேவைகள் தொடங்கின. கடைகள் திறக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+