சென்னை வரும் பாகிஸ்தான் அணி.. களைகட்டப்போகும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி! லோகோ வெளியிட்ட உதயநிதி
சென்னை: ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி மலேசியாவை எதிர்த்து முதல் போட்டியில் ஆகஸ்டு 3 ஆம் தேதி விளையாட இருக்கிறது.
7 வது "ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி" ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான். மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் "ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023" போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை ராடிசன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் -2023 போட்டியினை சென்னையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்கள்.
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள திட்டமிடுவதற்கென ஹாக்கி இந்தியா அதிகாரிகள் குழு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஹாக்கி பிரிவு மற்றும் அரசு அதிகாரிகள் குழுவினர் ஒடிசா மாநிலம் ரூர்கேலா மற்றும் கலிங்கா ஆகிய ஹாக்கி மைதானங்களை 2023 ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பார்வையிட்டனர்.
சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில் உலகின் முதல் பாரிஸ் ஒலிம்பிக் டர்ஃப் அமைத்தல், புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பாரிஸ் ஒலிம்பிக் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தனர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்கக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்புபணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மைதானத்தை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் 2023 ஏப்ரல் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் - 2023 போட்டியினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் ஜூலை 6 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
ஆசியன் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் - 2023 போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக ரூபாய் 12 கோடிக்கான காசோலையினை அமைச்சர் உதயநிதி தலைமைச் செயலகத்தில் ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்த போட்டிகளில் பங்கேற்க வருகின்ற சர்வதேச ஹாக்கி வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகள், உணவு, போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 கோப்பை அறிமுகம், "பொம்மன்" இலச்சினை வெளியிட்டு விழா நடைபெற்றது. மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் "பாஸ் தி பால்" கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப் பயணத்தை தொடங்கி வைத்தார்.
ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் - 2023 கோப்பை முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. பாஸ் தி பால் - கோப்பை சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாக ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பயணிக்கும்.
அத்துடன் ஆகஸ்டு 3 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. முதல் நாளில் கொரியா - ஜப்பான் அணிகளும், மலேசியா - பாகிஸ்தான் அணிகளும், இந்தியா - சீனா அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடுகின்றன. ஆகஸ்டு 12 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications