Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணி மாறும் பாமக? பழையன கழிதலும் புதியன புகுதலும்.. ராமதாஸ் திடீர் பதிவின் பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ‛பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே'' என்று திடீரென்று பதிவிட்டுள்ளார். மேலும் நன்னூலில் உள்ள இந்த வரியின் பொருள்படி பார்த்தால் பாமக கூட்டணியை மாற்றுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த பதிவு தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தான் பாமக போட்டியிட்டது. ஆனாலும் பாமக, பாஜக உள்பட கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

ramadoss pmk pattali makkal katchi

இந்நிலையில் தான் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. ராமதாஸ் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் தனது கருத்துகளையும், கட்சியின் நிலைப்பாட்டையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு பேசுப்பொருளாகி உள்ளது. அதாவது ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று, ‛‛பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே'' என்று பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் என்பது பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்க நூலான நன்னூலில் இடம்பெற்றுள்ளது.

இதற்கான பொருள் என்பது ‛‛பழையன கழிதலும் புதியன புகுதலும் காலப்போக்கில் குற்றம் ஆகாது. இருப்பினும் பழையன எல்லாமே கழிந்து விட வேண்டும். புதியன எல்லாமே புகுந்துவிட வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. பழையனவற்றிலும், புதியனவற்றிலும் உள்ள நல்லவற்றை எடுத்து கொள்ளலாம். அவ்வாறு நல்லது இல்லை என்றால் அதனை விட்டுவிடலாம்'' என்பது தான் அர்த்தமாகும்.

இதனால் தான் பாமகவின் தேர்தல் கூட்டணியில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஏனென்றால் பாமக தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது. இதற்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்தது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணிக்கு பாமக செல்கிறதா? இல்லாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிற கட்சியுடன் கூட்டணிக்கு பாமக செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் தற்போது வரை ராமதாஸ் அல்லது பாமக தரப்பில் இந்த பதிவின் பின்னணி பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதனால் ராமதாஸின் இந்த பதிவு என்பது தற்போது விவாதமாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+