பழனி கோவில் உண்டியலில் கொட்டி கிடந்த தங்கம்.. டன் கணக்கில் குவிந்த வெள்ளி! வருமானம் மட்டும் இவ்வளவா?
திண்டுக்கல்: உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.4 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 113 பணமும், 800 கிராம் தங்கமும், 11,275 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் சீசன், தொடர் விடுமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் வருகை அதிகரித்ததே இந்த வருவாய் உயர்வுக்குக் காரணம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

பழனி முருகன் கோவில்
அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விஷேச நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
சபரிமலை சீசன்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே சபரிமலை ஐயப்பன் சீசன், மற்றும் கார்த்திகை மாதம் ஆகியாற்றின் காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழனி முருகப் பெருமானை தரிசித்தனர். அவ்வாறு மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, சேவல், தானியங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள்.
உண்டியல் வசூல்
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பியவுடன் அவற்றை திறந்து எண்ணுவது வழக்கம். இந்நிலையில் சபரிமலை சீசன் காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் உண்டியல்கள் நிரம்பியது. இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டது.
உண்டியல் காணிக்கை
பின்னர் பணம், நாணயம் ஆகியவற்றை என்னும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த 18ஆம் தேதி முதல் நாள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.2 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 509, தங்கம் 631 கிராம், வெள்ளி 9,006 கிராம் மற்றும் 312 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்தன.
தங்கம் வெள்ளி
இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் நாளாக நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் ரூ.1 கோடியே 44 லட்சத்து 24 ஆயிரத்து 604, தங்கம் 169 கிராம், வெள்ளி 2,269 கிராம் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் 262 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன. இரு நாட்களையும் சேர்த்து மொத்தமாக ரூ.4 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 113, தங்கம் 800 கிராம், வெள்ளி 11,275 கிராம் மற்றும் 574 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள் உள்ளிட்ட பொருட்களும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications