பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை விவகாரம்.. "காலையில வா".. நள்ளிரவில் நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய சோகம்
சென்னை: காலையில் வீட்டுக்கு வா என நள்ளிரவு 2.50 மணிக்கு நண்பர் ஒருவருக்கு பல்லாவரம் ஐடி ஊழியர் மெசேஜ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் ஐடி ஊழியரான பிரகாஷ், தனது மனைவி காயத்ரி, மகள், மகன் ஆகியோரை மின் ரம்பத்தால் அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மின் ரம்பத்தை அமேசானில் இருந்து ஆர்டர் செய்துள்ளதை பார்க்கும் போது தற்கொலை முடிவு திட்டமிட்டு எடுக்கப்பட்டது என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ 80 லட்சம் கடன்
இந்த விசாரணையில் பிரகாஷுக்கு 80 லட்சம் கடன் இருந்தது தெரியவந்தது. அதாவது வீடு கட்ட ரூ 27 லட்சம் கடன் வாங்கியுள்ளாராம். அது மட்டுமல்லாமல் கார் வாங்கவும் கடன் வாங்கியுள்ளார். காயத்ரி நடத்தி வந்த நாட்டு மருந்து கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் பலரிடம் தின வட்டி, வார வட்டிக்கு கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

கடனை கட்ட முடியவில்லை
ஒரு கட்டத்தில் இந்த கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். ஒரு வேளை கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மருந்து கடைக்கு வந்து ஆபாசமாகவோ தற்கொலைக்கு தூண்டும் வகையிலோ பேசினரா என தெரியவில்லை. அவர்களுக்கு கடன் கொடுத்தவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்து வருகிறார்கள்.

மெசேஜ்
இந்த நிலையில் பிரகாஷ் இறப்பதற்கு முன்னர் நள்ளிரவு 2.50 மணிக்கு நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. நாளை வீட்டுக்கு வா என மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு அந்த நண்பர், ஏன் ஏதேனும் விசேஷமா என கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் தம்ஸ் அப் எமோஜியை அனுப்பியுள்ளார்.

நாளை வா
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அனேகமாக மனைவி, குழந்தைகளை கொன்ற பிறகு நண்பருக்கு மெசேஜ் அனுப்பி நாளை எங்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்த வா என்பதை நாளை வீட்டுக்கு வா என பிரகாஷ் குறிப்பிட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து மேலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications