கியூ ஆர் கோடுடன் புதிய பான் கார்டு.. 50 ரூபாயில் வீடு தேடி வரும்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்
சென்னை: கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டையை, ஆன்லைன் வழியாக அப்டேட் செய்து பெற்றுக்கொள்ளலாம். ரூ.50 கட்டணம் இதற்காக செலுத்த வேண்டும். விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கே பான் கார்டு அனுப்பி வைக்கப்படும். இந்த பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பான் கார்டுகள் தற்போது தவிர்க்க முடியாத ஒரு ஆவணமாக மாறிவிட்டது. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முக்கிய அடையாள எண்ணாக பான் கார்டு உள்ளது. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. சொல்லப்போனால் ரேஷன் கார்டு எவ்வளவு முக்கியமோ அதேபோல அனைத்து நிதி சார்ந்த விவகாரங்களுக்கும் பான் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது.

பான் கார்டு 2.0: உயர் மதிப்பில் தங்கம், நிலம் வாங்குவதற்கும் தற்போது பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்கம் டேக் ஸ் கட்டுவதற்கும் பான் கார்டு கட்டாயம் ஆகும். தற்போது நாடு முழுவதும் சுமார் 78 கோடி பேர் பான் கார்டு வாங்கியுள்ளனர். 10 இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டை தற்போதைய நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததது.
இதன்படி பான் கார்டு 2.0 ஒன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1,435 கோடி செலவிலான பான்கார்டு-2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி ஆன்லைன் மூலம் மட்டுமே பொதுமக்கள் பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பான்கார்டு விண்ணப்பிப்பதற்காக புதிய portal (போர்ட்டல்) ஒன்று உருவாக்கப்பப்பட உள்ளது.
ஆதார் கார்டு போலவே: பான் தொடர்பான சேவைகள் தற்போது மூன்று வெவ்வேறு தளங்களில் உள்ளன. அதாவது, இ - பைலிங், யுடிஐஐடிஎஸ்எல், புரோடீன் இ-அரசு ஆகிய போர்ட்டல்களில் உள்ளன. பான் 2.0 திட்டத்தில், அனைத்து பான் தொடர்பான சேவைகளும் வருமான வரித் துறையின் ஒரே போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படும். இதை முழுவதுமாக செயல்படுத்த இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.
ஆதார் கார்டுக்கு நிகரான அனைத்து வசதிகளும் தற்போது, பான் கார்டிலும் கொண்டு வரப்பட உள்ளது. ஆதார் கார்டில் உள்ள பான் கார்டிலும் கியூ-ஆர் கோடு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எப்படி விண்ணப்பிக்காலம் என்பது பற்றி பார்ப்போம்..
எந்த போர்டல் வழியாக?:
* ஏற்கனவே பான்காடு வைத்திருப்பவர்கள், என்எஸ்டிஎல் மூலமாக வாங்கி இருந்தால் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.Html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
* யுடிஐஐடிஎஸ்எல் மூலம் பான்கார்டு பெற்று இருந்தால் https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/CheckPANreprint.Action என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இரண்டில் எந்த போர்ட்டல் வழியாக விண்ணப்பித்து இருந்தோம் என்று தெரியாமல் இருந்தால், நீங்கள் மேற்கூறிய ஏதாவது ஒரு இணையதளத்தில் அப்ளை செய்து பார்த்தால் அந்த இணையதளத்திலேயே சரியானதா இல்லையா என்பதை காட்டி விடும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
* இந்த இணையதளத்தில் நீங்கள் பான்கார்டு எண், ஆதார் எண், பிறந்த மாதம் மற்றும் பிறந்த வருடம் ஆகியவற்றை குறிப்பிட்டு சப்மிட் செய்ய வேண்டும்.
* சப்மிட் செய்ததவுடன் முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவை தெரியும். அது சரியானாதா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
* அடுத்ததாக உங்களுடைய மெயில், செல்போன் அல்லது இரண்டுக்கும் ஓடிபி வரும். ஒருமுறை கடவுச்சொல் எனப்படும் ஒடிபி-யை பதிவிட வேண்டும். அதன்பிறகு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தலாம். கட்டணம் செலுத்தி முடித்து விட்டால் போதும், நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கே 15 முதல் 20 நாட்களுக்குள் வந்து விடும்.
* உங்கள் பான்கார்டில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தவறாக பதிவாகியிருந்தால் முதலில் அதனை மாற்ற வேண்டும். இதற்கான வசதி அந்த இணையதளத்திலேயே உள்ளது. அட்ரஸ் மாறியிருந்தாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அட்ரஸ் அப்டேட் செய்து கொள்ளலாம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications