பான் கார்டு உங்க கிட்ட இருக்கா? அப்ப இந்த நம்பர் இருக்கா பாருங்க? இதுல இவ்ளோ அர்த்தமா? ரொம்ப முக்கியம்
சென்னை: பான் கார்டுகளின் அவசியம், பயன்கள் என்னென்ன தெரியுமா? இந்த பான் பார்டுகளில் தரப்பட்டுள்ள 10 இலக்க எண்களுக்கான அர்த்தம் என்ன தெரியுமா?
பான் கார்டுகள் இன்றைய சூழலில் நமக்கு மிகவும் அவசியமான ஆவணமாகிவிட்டது. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு இந்த பான் கார்டுகள் தேவை. பெரிய அளவிலான தொகைகளை அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும்.

பயன்கள்: அதிக வருமானம் பெறுபவர்கள் வருடந்தோறும், தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.. அதாவது, வருடத்துக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு அவசியம் தேவைப்படும்.
ஒருவர் வங்கிக்கணக்கை துவங்குவதானாலும், இந்த பான் கார்டுகள் தேவை. பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமானாலும், டிமேட் கணக்குக்கு இந்த பான் கார்கள் தேவை. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கார்டுகளை பெற வேண்டுமானாலும், பான் கார்டு தேவை..
பான் கார்டுகள்: ஒருவர், ஒன்றிற்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டை பயன்படுத்தவும் முடியாது. எனவே, ஒன்றிற்கு மேல் பான் கார்டுகள் இருந்தால், அதை திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்.
அதேதபோல, பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம் என்ன? தெரியுமா? பான் கார்டின் முதல் 5 எழுத்துகள், சாதாரண எழுத்துக்களாகவே இருக்கும்.. அடுத்துள்ள 4 எழுத்துகள் எண்கள் மற்றும் இறுதியாக ஒரு எழுத்து மீண்டும் வரும்.. அதனால், இந்த 10 எண்களில் என்னென்ன தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டியிருக்கிறது.
வருமான வரித்துறை: பான் கார்டின் முதல் 3 எழுத்துக்கள் அகரவரிசையில் இருக்கும். அதாவது, AAA முதல் ZZZ வரை இருக்கலாம். 4வது எழுத்துக்கள் வருமான வரித்துறையின் பார்வையில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கிறது..
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு தனிநபர் என்றால், உங்கள் பான் கார்டின் 4வது எழுத்து P-என்றிருக்கும்.. சுருக்கமாக சொல்லப்போனால், முதல் 3 எழுத்துகளில், P- தனி நபர், F- நிறுவனம், C- நிறுவனம், A- AOP (நபர்களின் சங்கம்), T- டிரஸ்ட், H- HUF (ஹிந்து அன்டிவைடெட் ஃபேமிலி), B- BOI, L- உள்ளூர், J- நீதித்துறை நபர், G- அரசாங்கத்திற்கு என்று இவைகளில் ஏதாவது ஒன்று முதல் 3 எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பான் கார்டு: பான் கார்டு எண்ணின் 5வது எழுத்து எழுத்துக்கள், குடும்பப்பெயரின் முதல் எழுத்தாகும்.. இது முழுக்க முழுக்க பான் கார்டு வைத்திருப்பவரை மட்டுமே சார்ந்துள்ளது. இதில் வைத்திருப்பவரின் கடைசி பெயர் மட்டுமே காணப்படும். பான் கார்டில் கடைசியாக உள்ள 4 எண்கள் 0001 முதல் 9999 வரை இருக்கலாம். உங்கள் பான் கார்டின் இந்த எண்கள் இப்போது வருமான வரித் துறையில் இயங்கும் சீரீஸை குறிக்கும். அதில், கடைசி எண்கள் அல்லது எழுத்தாகவும் இருக்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications