பான் கார்டு இருக்குதுல்ல.. அதுல இந்த வசதி இருக்கு தெரியுமா? ஜஸ்ட் 5 நிமிஷம்.. ஆன்லைனில் முடிச்சிடலாம்
சென்னை: பான் கார்டுகளில் ஏதாவது திருத்தம் இருந்தால் செய்து கொள்ளலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. அதேசமயம், திருமணமான பெண்கள், பான் அட்டையில் தந்தையின் பெயருக்கு பதில் தங்கள் கணவரின் பெயரை மாற்றுவது எப்படி தெரியுமா?
பான் கார்டுகள் ஒவ்வொரு தனிநபருக்கும் அவசியமானவை.. மிக முக்கியமான ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது.
பயன்கள்: நிதி பரிவர்த்தனைகளுக்கு பெரும்பாலும் பான் கார்டுகளே பயன்படுகிறது. இந்த பான் கார்டு இருந்தால்தான், நிதிப்பரிவர்த்தனை முதல் பல்வேறு வேலைகளை நம்மால் முடிக்க முடியும்.. ஒரு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால்கூட, அதற்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. சொத்தை வாங்கி விற்க வேண்டுமானாலும், பான் கார்டு தேவைப்படுகிறது.

இந்த பான் கார்டில் சில திருத்தங்களை செய்துகொள்ள நமக்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன.. உதாரணமாக பான் கார்டில் நம்முடைய பெயர் மாற்ற வேண்டுமானால் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். அதேபோல, பெண்ணுக்கு திருமாணகிவிட்டால், சிலர் தங்கள் கணவர் பெயரையும் சேர்த்து எழுத பயன்படுத்துவார்கள். அந்தவகையில், தன்னுடைய பெயருடன் கணவனுடைய பெயரை எப்படி சேர்ப்பது தெரியுமா? அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?
இதற்கு தேவையான ஆவணங்கள்:
திருமண உரிமம் அல்லது திருமண அழைப்பிதழ்
அரசு வெளியீட்டில் பெயர் மாற்றத்தை வெளியிடுதல்
கணவரின் பெயருடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகல்
பதிவுசெய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து சான்றிதழ் (விண்ணப்பதாரரின் பெயர் மாற்றத்திற்கு மட்டும்)
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் TIN-NSDL என்ற வெப்சைட் அல்லது UTIITSL க்கு செல்ல வேண்டும்.
- அங்கிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும் தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
- பிறகு, பான் நம்பரை படிவத்தில் நிரப்பி, உங்கள் பெயருக்கு எதிராக உள்ள கட்டத்தை மட்டும் டிக் செய்ய வேண்டும்.
- படிவத்தில் உள்ள தகவல்களை சரிபார்த்த பிறகு "வேலிடேட்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.. பிறகு, "சப்மிட்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இந்த செயல்முறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அந்த கட்டணத்தை நெட்பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டு, கேஷ் கார்டு போன்றவை மூலம் செலுத்தலாம்.
- பணம் செலுத்தியவுடன், பான் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டும்
- அந்த விண்ணப்பத்தில் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை ஒட்டி, கையெழுத்திட வேண்டும்
- விண்ணப்பத்தை, NSDL மூலம் செய்தால், அஞ்சல் மூலம் NSDL க்கு அனுப்பவும் அல்லது UTIITSL போர்ட்டல் மூலம் செய்தால், UTIITSL க்கு அனுப்பவும்.
- விண்ணப்ப குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி PAN விண்ணப்ப நிலையைப் பின்தொடரலாம்
புதிய கார்டுகள்: ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தபின்னர், ஒப்புகை படிவத்தை 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் Protean eGov Technologies Limitedக்கு அனுப்ப வேண்டும்... உங்கள் விண்ணப்பம் முடிந்ததும், புதிய பெயர் மற்றும் அதே நிரந்தர கணக்கு எண் (10 இலக்க எண்ணெழுத்து குறியீடு) கொண்ட புதிய PAN கார்டை பெறுவீர்கள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications