உங்க கிட்ட ஆதார் கார்டு + பான் கார்டு இருக்கா.. இதை முடிச்சிட்டீங்களா.. இன்னும் ஒரே நாள்தான் இருக்கு
சென்னை: நாளை 30ம் தேதிக்குள் பான் கார்டையும் ஆதார் அட்டையையும் இணைக்கப்பட வேண்டும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.. அவ்வாறு இணைக்காவிட்டால் என்னாகும் தெரியுமா?
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளைய தினம், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
ஏற்கனவே, நிறைய காலக்கெடு இதற்காக விதிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இந்த இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பலரும் இதை செய்யவில்லை...

அதனால்தான், ஜூன் 30ம் தேதி வரை மறுபடியும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.. இப்படி கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஆதார், பான் கார்டை இணைப்பவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் இணைக்க வேண்டும்: வருமான வரிச்சட்டத்தின்படி, 2017ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நிலவரப்படி பான் கார்டு வழங்கப்பட்ட அனைவருமே ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும்... ஜம்மூ காஷ்மீர், அசாம், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், அயலக இந்தியர்கள் (NRI), 80 வயதை தாண்டியவர்கள் இந்த இணைப்பு செய்ய தேவையில்லை..
விளைவுகள் என்ன: ஒருவேளை, இந்த இணைப்புகளை செய்யாவிட்டால், கணக்கு தொடங்குவதற்கு தேவையான முதன்மை ஆவணங்கள் என்பதால் வங்கிக் கணக்கைத் திறக்க முடியாது.. புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பெறுவது சாத்தியமில்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளியூர் பயணம் செய்ய முடியாது.. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குவது ரூ. 50,000 அனுமதிக்கப்படாது.. ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள். 50,000 எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது.
எப்படி இணைக்க வேண்டும்:
- இந்த லிங்கிற்குள் செல்ல வேண்டும் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar .
- உங்கள் PAN மற்றும் ஆதார் அட்டை எண்ணை அந்தந்த புலங்களில் உள்ளிடவும்.
- ஆதார் மற்றும் மொபைல் எண்ணின்படி பெயர் போன்ற விவரங்களை உள்ளிடவும். OTP ஐச் சமர்ப்பித்து சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் ஆதார் பான் இணைக்கும் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், "கட்டண விவரங்கள் கிடைக்கவில்லை" என்று மெசேஜ் வரும். முன்பு குறிப்பிட்ட அதே படி கட்டணத்துடன் நீங்கள் செல்லலாம்.
- உங்கள் பான் கார்டு ஏற்கனவே உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், முதலில் விவரங்களைச் சரிபார்த்து, சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்தால் போதும்.
இந்தத் தளங்கள் வேலை செய்யவில்லை என்றால், UTIITSL அல்லது Protean இணையதளங்களுக்குச் சென்று உங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications