TVK Panaiyur: தவெகவினர் அராஜகம் பண்றாங்க.. இதுக்கு மேல சும்மா இருக்கமாட்டோம்.. கொந்தளித்த பனையூர் மக்கள்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தவெகவினர் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு இன்று முதல் வாங்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த விருப்பமனுவை பெற ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் குவிந்ததால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தவெகவினர் அராஜகம் செய்கின்றனர். இதுக்கு மேல சும்மா இருக்கமாட்டோம் என்று வார்னிங் கொடுத்துள்ளனர்.
நடிகர் விஜயின் தவெக கட்சி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் தவெகவினர் கட்சியில் விருப்பமனு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தவெகவினர் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று கட்சி தலைமை அறிவித்தது.
விருப்ப மனு வாங்க கூட்டம்
முதல் நாளான இன்று காலை 12 மணிக்கு விருப்பமனு வழங்கும் பணி தொடங்கியது. இந்த விருப்பமனுவை பெற கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் காலை முதல் குவிந்தனர். ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு விருப்ப மனுவை வாங்கி சென்றனர். பலரும் தங்களின் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்பதை தெரியப்படுத்தம் வகையில் விருப்பமனுவை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பனையூர் கட்சி அலுவலகம் மற்றும் அதன் முன்பு உள்ள சாலைகளில் தவெகவினர் நிறைந்து காணப்பட்டனர். இதனால் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அலுவலகம் முன் மக்கள் கோபம்
இது அங்குள்ள மக்களை கோபப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பு வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது பெண் ஒருவர், ‛‛இந்த முழு ஏரியாவையும் அவர்கள் பிளாக் செய்துள்ளனர். யாரையும் வரவிடாமல் செய்கிறார்கள்.
நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். இப்படி இடையூறு செய்தால் நாங்கள் எப்படி சமாளிப்போம். கார்களை எல்லாம் இடையூறாக பார்க் செய்துள்ளனர். நாங்கள் எதையுமே வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாது'' என்று கூறினார்.
அராஜகம் பண்றாங்களாம்
இன்னொரு பெண் கூறுகையில், ‛‛தவெகவினர் அராஜகம் பண்றாங்க.. அராஜகத்தை தாங்கவே முடியவில்லை. இவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க இங்க.. ரோட்டில் எப்படி நிற்கிறாங்க பாருங்க. இதுக்கு மேல நாங்க சும்மா இருக்க போறது இல்லை.
ECR-யில் அமைதியாக இருக்கலாம் என்று தான் செலவு செய்து இங்கு வந்து வாழ்கிறோம். மேடம் நாங்க உங்க காரை மட்டும் அனுமதிக்கிறோம் என்கிறார்கள். யாரு இவங்க எங்க காரை அனுமதிக்கிறதுக்கு.. நாங்க இங்கேயே குடியிருக்கிறவங்க.. இவங்க எங்க காருக்கு அனுமதி கொடுப்பாங்களாம்.. என்ன இதெல்லாம்?'' என்று கொந்தளித்தார்.
குப்பையை வீசிவிட்டு
மற்றொரு பெண் கூறுகையில், ‛‛வீட்டுக்கு முன்பு கார் பார்க் செய்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு குப்பையை தெரு முழுவதும் போட்டுவிட்டு செல்கின்றனர். இப்போது தான் 3 நாளுக்கு முன்பு மீட்டிங் நடந்தது. இன்று மீண்டும் தொடங்கிட்டாங்க'' என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications