‛1956’.. பண்ருட்டியார் சொன்ன ஆருடம்.. 'முட்டுக்கட்டை' அவர்தான்! 67 ஆண்டுக்கு பின் திரும்பும் வரலாறு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை யார் கைப்பற்றுவது என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இந்நிலையில் நாளை திருச்சியில் ஓபிஎஸ் தரப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கட்சியின் தலைமையை கைப்பற்ற தரப்பில் கடும் போட்டி நிலைவி வந்தது. இந்த போடடியில் சசிக்கலா, டிடிவி தினகரன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒன்றாக கைக்கோர்த்தனர். பொதுச்செயலாளர் என்கிற பதவியில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என விதியை மாற்றினர். ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்ற நிலையில் விரைவிலேயே ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது.

Panruti Ramachandran predicts that the OPS conference will create history

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இந்த பிரச்னை உச்சகட்டத்தை எட்டியது. அதாவது கட்சியின் விதிகளை மீண்டும் திருத்தி பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து அதற்கு தேர்தல் நடத்துவது, ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினரை கட்சியிலிருந்து நீக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது ஓபிஎஸ் தரப்பினர் எதிர்பார்த்ததுதான். எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான வழக்கு நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் பொதுக்குழு செல்லும் என்றும் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் ஈபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த வேட்பாளர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணைம் ஈபிஎஸ்ஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்தது.

நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் ஈபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில்தான் தனது பலத்தை நிரூபிக்க நாளை திருச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தாள் விழா, கட்சியின் 51வது ஆண்டு விழா என முப்பெரும் விழா மாநாட்டை ஓபிஎஸ் நடத்துகிறார். இந்த மாநாடு அரசியல் களத்தில் ஓபிஎஸ்-ன் செல்வாக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து பேட்டியளித்துள்ள ஓபிஎஸ் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன், "இந்த மாநாடு வரலாறு படைக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, "1956ம் ஆண்டு அண்ணா திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த ஆண்டுதான் நான் திமுகவில் இணைந்தேன். அந்த மாநாட்டில்தான் திமுக தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை நடத்தியது. இந்நிலையில் 67 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா வழியில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. எனவே இது வரலாறு படைக்கும். அதிமுகவை பொறுத்த அளவில் ஒருங்கிணைந்த என்கிற வார்த்தைக்கே இடமில்லை. எம்ஜிஆரிடம் உங்களது வாரிசு யார் என்று கேட்டபோது அதிமுகவின் தொண்டர்கள்தான் என்னுடைய வாரிசு என்று கூறினார். ஆக தொண்டர்களாகிய நீங்களே இந்த இயக்கத்தை நடத்த வேண்டும் என்பதை சொல்வதற்காகதான் இந்த மாநாடு நடக்கிறது.

Panruti Ramachandran predicts that the OPS conference will create history

ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள். அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். அவர்களுக்கும் இந்த இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும் சம்பந்தமில்லை. அதிமுகவை பொறுத்த அளவில் தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். அதேபோல நீதிபதிகளும் கட்சியின் சட்ட விதிகளை புரிந்துகொள்ளாமல் தீர்ப்பளித்து வருகின்றனர். அவர்களுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது. நாளை நடைபெறும் மாநாட்டில் சசிகலாவும், டிடிவி தினகரனும் பங்கேற்பார்களா என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கா, ஈபிஎஸ்க்கா என்பது இந்த மாநாட்டில் தெரிந்துவிடும். ஈபிஎஸ் இந்த மாநாட்டுக்கு மட்டுமல்ல அதிமுகவுக்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+