காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டம் நள்ளிரவு 12 மணி வரை... பிரச்சாரக் களத்தில் பண்ருட்டி வேல்முருகன்..!
சென்னை: நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளில் ஒன் இந்தியா தமிழ் குழு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுடன் ஒரு நாள் முழுவதும் ஒன் இந்தியா தமிழ் குழு பயணித்தது.
அதன் விவரம் பின்வருமாறு;

ஒரு நாள் நிகழ்வு
பண்ருட்டி பேருந்துநிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள வேல்முருகனின் இல்லத்திற்கு காலை ஆறரை மணி முதலே தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்களும், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்களும் வருகை தரத் தொடங்குகின்றனர். அவர்களுக்கு அங்கு தேநீர் கொடுக்கப்படுவதை தொடர்ந்து வேல்முருகனின் வருகையை எதிர்நோக்கி அவர்கள் அங்கு காத்திருக்கின்றனர்.

கட்சியினர்
காலை ஏழே கால் மணிக்கெல்லாம் தன்னை தயார் செய்து கொண்டு வீட்டிற்கு வந்துள்ள தொண்டர்களையும்- நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக வேல்முருகன் தனது அறைக்குள் வந்துவிடுகிறார். வரிசையாக வேல்முருகனை அவர்கள் சந்திக்கத் தொடங்கும் அவர், காலை சிற்றூண்டியை முடித்துக் கொண்டு பிரச்சாரத்துக்கு புறப்பட்டு விடுகிறார்.

பிரச்சார ஜீப்
தனது கார் கண்ணாடியை இறக்கி சாலையின் இருபுறமும் பொதுமக்களை பார்த்து புன்னகைத்தபடி அவர்களிடம் ஆதரவு கோரிக்கொண்டே செல்கிறார். இதனிடையே வேல்முருகனுக்கு வழி நெடுகிலும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் குழுவாக நின்று வரவேற்பு கொடுக்கின்றனர். இதையடுத்து பிரச்சார தொடக்க பாயிண்ட் வந்துவிட்டால் காரில் இருந்து திறந்தவெளி ஜீப்புக்கு அவர் மாறுகிறார்.

நள்ளிரவு 12 மணி
உணவு இடைவெளி கூட இல்லாமல் தொடரும் அவரது பிரச்சார பயணம் மாலை முடிகிறது. சற்று நேர இளைப்பாறுதலுக்கு பிறகு மீண்டும் அவரது பயணம் தொடங்கிவிடுகிறது. மாலை நேரப் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வேல்முருகன் வீடு திரும்பும் நிலையில், அப்போதும் அவர் வீட்டில் கூட்டம் குறைந்தபாடில்லை. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், அடுத்த நாள் பயணத்திட்டம் குறித்து விவாதிக்கவும் ஏராளமான நிர்வாகிகள் வேல்முருகனை சந்திப்பதற்காக காத்திருக்கின்றனர். வந்திருந்தவர்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்துப் பேசி அவர்களை அனுப்பி வைக்கும் வேல்முருகன் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஓய்வுக்குச் செல்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications