அடித்து ஆடும் தமிழ்நாடு அரசு.. பரந்தூர் விமான நிலையம் வேகமாக வருது.. வெளியான முக்கிய அப்டேட்.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கட்டப்பட உள்ள பரந்தூர் விமான நிலையத்தின் நிலம் கையகப்படுத்தும் அறிக்கை முதல்முறையாக வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

Parandur Airport Chennai: First report of land accusation released by Tamil Nadu Government

2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.

புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.

எதிர்ப்பு: இதற்காக தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்த முடிவு செய்த நிலையில் மக்களுக்கு அதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை அறிவித்து உள்ளனர். மக்கள் பலர் குழுக்களாக இணைந்து கடந்த மூன்றரை மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த விமான நிலையத்திற்காக விவசாய நிலத்தை கேட்கிறார்கள் என்று கூறி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராம மக்கள்தான் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த முறை திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. திட்டத்திற்காக முன்பு எடுக்கப்பட இருந்த நிலத்தை விட கூடுதல் நிலத்தை கைப்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய விமான நிலையத்தின் திட்ட அறிக்கை முதல்முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது நிலம் கையகப்படுத்துவதற்கான முதல் திட்ட அறிக்கை செய்தி தாள்களில் விளம்பரமாக வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை பரந்தூரில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும். இந்த விமான நிலையத்திற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூர் மற்றும் 19 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பச்சை சிக்னல் கொடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி அனுமதி வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்பை விட 770 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் வரும் நாட்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+