பரந்தூர் ஏர்போர்ட்: நெட்டிசன் பகிர்ந்த கருத்துக்கு ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை அண்டை மாநிலங்களுக்கு ஜாக்பாட் ஆக அமையும் என்ற விமர்சனமும் எழுந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டத்திற்கு சந்திரபாபு அதிர்ஷ்டசாலியாக உணர்வார் என்று கூறி நெட்டிசன் ஒருவர் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷை டேக் செய்து இருந்தார். இதற்கு நாரா லோகேஷும் உடனே ரீப்ளே அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பரந்தூர் ஏகனாபுரம் மக்கள் இந்த இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தவெகவும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வந்தது.

Parandur airport

ஆந்திராவுக்கு சாதகமாக அமைந்துவிடும்

தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இது பற்றி எந்த அறிவிப்பும் கடந்த 3 மாதங்களாக வெளியாகவில்லை. இதனால், புதிய விமான நிலைய திட்டத்திற்கு முதல்வர் விஜய் ஆதரவாக இருக்கிறாாரா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வதால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திமுகவும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டுடன் கடும் போட்டி நடத்தும் ஆந்திராவுக்கு சாதகமாக விஜய் அரசின் அறிவிப்பு அமைந்துவிடும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நெட்டிசன் கருத்துக்கு ஆந்திர அமைச்சர் பதில்

நெட்டிசன் ஒருவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷை டேக் செய்த் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டத்திற்கு சந்திரபாபு அதிர்ஷ்டசாலியாக உணர்வார், மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீ சிட்டியில் சென்னை மக்களுக்காக புதிய விமான நிலையம் ஒன்றைக் கட்டித் தருவார்" என்று கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு ரீப்ளை செய்துள்ள ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் , 'அமராவதி, போளவரம் மற்றும் 3 பொருளாதார மண்டலங்கள் என ஆந்திர பிரதேசத்தில் செய்வதற்கு ஏற்கனவே நமக்கு போதுமான அளவுக்கு வளர்ச்சிப் பணிகள் இருக்கின்றன. இது எங்கள் டு டூ (TO-DO) பட்டியலில் இல்லை. மரியாதையுடன், இதை கடந்து செல்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். நார லோகேஷின் இந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+