52 நொடி அலற விட்ட பராசக்தி.. அத்தனை கத்தரி போட்டும் சிவகார்த்திகேயன் படம் மாஸ்! தூள் கிளப்பிய பேன்ஸ்
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பராசக்தி படம் இன்று வெளியாகி உள்ளது.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இன்று ரிலீஸாக உள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தடைகள் அத்தனையையும் தாண்டி, கிட்டத்தட்ட 700 தியேட்டர்களில் இன்று பராசக்தி வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.
சுதா கோங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில், ரவி மோகன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி - சென்சார் சிக்கல்
படம் முதலில் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு படங்களும் நேரடியாக மோதும் சூழல் உருவானது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளில் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தியதால், சான்றிதழ் வழங்குவது தாமதமானது.
வரலாற்று ஆதாரங்கள்
பராசக்தி படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டாலும், முதலில் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மேலும் படம் மறுஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டது. இதனால் படம் வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நீடித்தது.
25க்கும் மேற்பட்ட இடங்களில் கட் செய்ய கூறப்பட்டதாகவும், பின்னர் ரிவைசிங் கமிட்டி 8 முதல் 10 இடங்களில் மட்டுமே மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது... அதுமட்டுமல்ல, படம் 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக கொண்டதால், வரலாற்று ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி ரிவைசிங் கமிட்டி கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் சமர்ப்பித்த சான்றுகள் போதாது என தெரிவிக்கப்பட்டது.
27 இடங்களில் "கத்தரி"
இந்த சூழலில், நேற்றைய தினம் பராசக்தி படத்திற்கு U/A 16+ சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. படத்தின் ரன் டைம் 2 மணி 42 நிமிடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக படத்தில் 27 இடங்களில் உள்ள வசனங்களை மாற்றச் சொல்லி தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது.
குறிப்பாக இந்தி என் கனவை அழித்தது, இந்தி அரக்கி, இந்தி கத்துகிட்டு போன்ற வ்ர்த்தைகள் நீக்கப்பட்டதாக தெரிகிறது.. அதேபோல அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும் என்ற புத்தக தலைப்பு, நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது. மேலும், இங்கு யார் ஆண்டாலும் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்ற வசனமும் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 52 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன..
அதிக தியேட்டர்களில் ரிலீஸ்
சென்சார் சான்றிதழ் நேற்று கிடைத்த சில மணி நேரத்திலேயே, டிக்கெட் முன்பதிவு உடனே ஆரம்பமாகி விட்டது.. ட்ரெயலருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் காத்திருந்த நிலையில், பராசக்தி படம் திட்டமிட்டபடி இன்று வெளியானது.
அதுமட்டுமல்ல, ஜனநாயகன், பராசக்தி இரண்டுமே ஒரே சமயத்தில் வெளியாகும் என்பதால், ஜனநாயகன் 60%, பராசக்தி 40% என்ற ரீதியில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.. ஆனால், ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளி போயுள்ளதால், பராசக்தி படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இன்றைய தினம் 700 தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது..
கிளம்பிய விவாதங்கள்
அதேசமயம், அரசியல், கலாச்சாரம், தணிக்கை நடைமுறை, படைப்பு சுதந்திரம், வரலாற்று உண்மை போன்றவை குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும், விவாதங்களையும் இந்த படம் எழுப்பிவிட்டுள்ளது..
இதனிடையே பராசக்தி படத்துக்கு சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்த ரசிகர்கள், மற்றொரு புறம் நீக்கப்பட்ட வசனங்கள் குறித்து கேள்வி எழுப்புவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டி உள்ளது..52 வினாடி காட்சிகள், 27 இடங்களில் வசன மாற்றம் என்றால் படத்தின் ஆன்மா பாதிக்கப்படாதா? இந்தி திணிப்பு எதிரான படத்துக்கு இத்தனை கெடுபிடிகளா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜனநாயகன், பராசக்தி இரண்டு படங்களின் டிரெயிலர்கள் ஒரே நாளில் வெளியான நிலையில், ஜனநாயகனை விட பராசக்தி கூடுதல் கவனம் பெற்றுள்ளது..
எனினும் வசூல், படத்தின் விமர்சனம், ரசிகர்களின் ஆதரவு போன்றவையே வரும் நாட்களில் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications