ஜனநாயகனை முந்தும்.. பராசக்தி! இசை வெளியீட்டு விழாவிலும் அரசியலா! சட்டென வந்த அப்டேட்
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியிடப்படகிறது. இதற்கான தேதியும் நேரமும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், ஜன.9ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா மலேசியாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஓடிடி உரிமையை ஜீ தமிழ் கைப்பற்றியிருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஜன.4ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜீ தமிழில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பப்படுகிறது. அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு சன் டிவியில் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருப்பினும், இந்த திரைப்படத்திற்கு சவால் விடும் வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் வந்திருக்கின்றன. அதில் முக்கியமானதுதான் பராசக்தி திரைப்படம். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். அவர் லேசுபட்ட ஆள் கிடையாது. ஏற்கெனவே அவர் இயக்கியிருந்த இறுதி சுற்று, சூரரை போற்று உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
அப்பேற்பட்ட இயக்குநர், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு கதையை இயக்கியிருக்கிறார் எனில், நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. ரெட் ஜெயன் மூவிஸ் வெளியிடும் இந்த திரைப்படம் திராவிட இயக்க பற்றாளர்களுக்கு கொண்டாட்டமாக அமையும். எனவே ஜனநாயகன் திரைப்படம் மீதான தாக்கம் குறையும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
அதேபோல, ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாகி அடுத்த சில நாட்களில் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித் ரசிகர்களுக்கு இது தல பொங்கலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இதெல்லாம் ஜனநாயகனுக்கு முன் இருக்கும் சவால்களாக இருக்கிறது.
இந்த பின்னணியில்தான், பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கான தேதியும் நேரமும் தற்போது வெளியாகியுள்ளன.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications