SOLD OUT: மொத்தமாய் தூக்கி சாப்பிட்ட 'பராசக்தி'! சென்னை தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்!
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சென்னையில் முக்கிய திரையரங்குகளில் மொத்த டிக்கெட்களும் விற்று தீர்ந்திருக்கின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம், இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. எனவே திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகுமா? என்பதில் சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் நேற்று திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்ததையடுத்து இன்று திட்டமிட்டபடி, திரைப்படம் வெளியாகியிருக்கிறது. திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே சென்னையில் முக்கியமான தியேட்டர்களில் மொத்த டிக்கெட்களும் விற்று தீர்ந்திருக்கின்றன.
குறிப்பாக காலை 7.30 மணி நிலவரப்படி, சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்குகளில், காலை 9 மணி ஷோவுக்கான டிக்கெட் 3 ஸ்கிரீன்களிலும் விற்று தீர்ந்திருக்கிறது. அதேபோல, மதியம் 12.45 மணி ஷோவுக்கான டிக்கெட் 2 ஸ்கிரீன்களில் விற்று தீர்ந்திருக்கின்றன. மற்ற ஷோவுக்கான டிக்கெட்கள் முழுமையாக விற்று தீரவில்லை என்றாலும், ஒன்றிரண்டு டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன.
ஈஞ்சம்பாக்கம் விஜய் பார்க் மல்டி காம்லக்ஸிலும் இதே நிலவரம்தான். தி.நகர் கிருஷ்ணவேணி சினிமாசிலும் டிக்கெட்கள் ஒன்றிரண்டு மட்டுமே உள்ளன. ஈசிஆர்-ல் உள்ள மாயாஜாலில் பெரும்பாலான ஷோக்களுக்கான டிக்கெட்கள் ஏறத்தாழ ஹவுஸ்புல் ஆகியுள்ளன. ஏஜிஎஸ் மதுரவாயல், ஏஜிஎஸ் வில்லிவாக்கத்திலும் அனைத்து ஷோக்களும் ஏறத்தாழ ஃபுல் ஆகியுள்ளன.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications