கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள்! மாற்றியோசித்த திமுக மகளிர் அணி! அப்படி என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நாளை தொடங்கவுள்ள நிலையில் ஆண்டு முழுவதும் அதனை கொண்டாட தீர்மானித்துள்ளது திமுக தலைமை.

திமுகவில் உள்ள இளைஞரணி, மகளிரணி உட்பட அனைத்து சார்பு அணிகளின் சார்பாகவும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை 100 நாட்களுக்கு கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை வித்தியாசமாக கொண்டாடவுள்ளது திமுக மகளிர் அணி.

Parasakthi movieCelebration, DMK womens wing organized Parasakthi movie in Woodlands

கருணாநிதி கதை வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தை உட்லாண்ட்ஸ் தியேட்டரில் மீண்டும் திரையிடும் திமுக மகளிர் அணி சிறப்பு விருந்தினராக நடிகர் பிரபுவை அழைத்துள்ளது. பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சிவாஜிகணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக கருணாநிதி பிறந்தநாள் அன்று கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை தான் திமுக மகளிர் அணி நடத்தும். இந்தாண்டு சற்று வித்தியாசமாக பராசக்தி திரைப்படத்தை திரையிடுகிறது. திமுக மகளிர் அணிச் செயலாளராக கனிமொழி இருந்த வரை ஆண்டுதோறும் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று அவரது சிஐடி காலனி இல்லம் களை கட்டும்.

தற்போது ஹெலன் டேவிட்சன் திமுக மகளிரணிச் செயலாளராக உள்ள நிலையில் கனிமொழியின் ஆலோசனையின் பேரில் இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடத்தப்படவுள்ளன. குறிப்பாக திமுக இளைஞரணிக்கு சளைக்காமல் மகளிர் அணி சார்பில் கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி திமுக மகளிர் அணியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதேபோல் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகளும் கருணாநிதி மற்றும் ஹெலன் டேவிட்சன் தலைமையில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+