லட்டு பாவங்கள் வீடியோவை டெலிட் செய்த பரிதாபங்கள் சேனல்.. வருத்தம் தெரிவித்து பரபரப்பு விளக்கம்
சென்னை: 'லட்டு பாவங்கள்' வீடியோவை நீக்கி உள்ளதாக 'பரிதாபங்கள்' சேனல் விளக்கம் அளித்துள்ளது. கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொலியை நீக்கி உள்ளோம் இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கூறியுள்ளது.
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருப்பதி திருமலையின் புனிதத்தையே முற்றிலுமாக கெடுத்து விட்டார்கள்.

அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்தும், புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தி உள்ளார்கள். எனினும், நாங்கள் இப்போது திருப்பதியில் மிக தூய நெய்யை பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்" என்று கூறினார்.
இதனிடையே மத்திய உணவு பாதுகாப்பு துறை நடத்திய ஆய்வில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்குநாடு முழுவதும் பெருமாள் பக்தர்கள் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறுபக்கம் மத்திய அரசும் விளக்கம் கேட்டு ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பபட்டுள்ளது. நடிகரும், ஆந்திர துணைமுதல்வருமான பவன் கல்யாண், திருப்பதி விவகாரத்தை தனிப்பட்ட முறையில் தீவிரமாக கவனித்து வருகிறார்.
தமிழ்நாட்டிலும் திருப்பதி லட்டு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் லட்டு விவகாரம் தொடர்பாக , 'லட்டு பாவங்கள்' என்ற வீடியோவை தங்களுடைய வழக்கமான காமெடி பாணியில் நையாண்டி செய்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்றது. இந்த வீடியோ நாடு முழுவதுமே வேகமாக பரவியது. இந்நிலையில் லட்டு பாவங்கள் வீடியோ, வெளியான சில மணி நேரத்திலேயே நீக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்துக்களின் உணர்வகளை வைத்து இப்படி வீடியோ பதிவிடலாமா என்று பலரும் பரிதாபங்கள் சேனலை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தார்கள். கடும் எதிர்ப்பை தொடர்ந்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வீடியோ நீக்கி உள்ளது. மேலும் நீக்கப்பட்டது குறித்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பரிதாபங்கள் சேனல் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பரிதாபங்கள் சேனல் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொலியை நீக்கி உள்ளோம் இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications