விடக்கூடாது.. மேற்கு மண்டலத்தில் இன்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று திருப்பூரில் பிரமாண்டமாக நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று அறிவுரைகளை வழங்க உள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை திமுக தொடங்கி செய்து வருகிறது.

அந்த வகையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை திமுக பிரமாண்டமாக நடத்தி வருகிறது. இந்த கூட்டங்கள் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்பதால் இந்த கூட்டங்களை திமுக பிரமாண்டமாக நடத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறது.
அதன்படி டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டம் திருச்சியில் நடந்து முடிந்தது. அதன்பிறகு தெற்கு மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்து முடிந்தது. இந்த 2 கூட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் எவ்வளவு முக்கியம். வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும். சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதேபோல் திமுகவின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தான் திமுக. மேற்கு மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்கு மண்டலத்தில் உள்ள 50 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதுதவிர ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேச உள்ளார். இதையடுத்து விழா ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 ஏக்கரில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரமாண்டமான மேடையும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications