திரிஷாவுக்கு வாழ்த்துகள் – விஜய் யோசித்திருப்பார்! இனி இதுபற்றி பேசமாட்டேன் – பார்த்திபன் மன்னிப்பு
சென்னை: நடிகை திரிஷா விவகாரம் பற்றி இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இன்று புதிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ள பார்த்திபன் நடந்த சம்பவம் குறித்து விஜய் இப்போது யோசித்து இருப்பார் என்று பரபரப்பாக கூறியுள்ளார். . அதோடு, என் பக்க விளக்கத்தை சொல்வதால் பக்க விளைவுகள் அநாகரிகமாக அரங்கேறும் என்பதை அறிந்து இதுபற்றி இனி பேசமாட்டேன் என்று பார்த்திபன் மன்னிப்பு கோரியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தனியார் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். அப்போது திரிஷா பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திரிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார்.

அதன்பிறகு பார்த்திபன் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். திரிஷா பற்றி வீடியோவில் பேசி வருகிறார். நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
பார்த்திபன் முதல் வீடியோ
அந்த வீடியோவில், நிகழ்ச்சியில் நடந்ததை முழுமையாக விளக்கினார். இதுபற்றி பார்த்திபன், ''திரிஷா பற்றி பேசிய காரணம் அந்த நேரத்தில் நிகழ்ச்சியில் அவரது படம் வந்ததால் தான் கருத்து கூறினேன். நான் அதை திட்டமிட்டு பேசவில்லை. அந்த நேரத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து நின்ற பிறகுதான் அந்த வார்த்தையை சொன்னேன். இப்படி பேசியிருக்க வேண்டாம் என்று நண்பர் கூறியதால் தனியார் சேனலுக்கு தான் போன் செய்து அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று கேட்டு கொண்டேன். ஆனால் ரசிகர் மூலம் வலைதளத்தில் பரவியது.
நான் யாரைப் பற்றியும் தரக்குறைவாக பேசக்கூடியவன் கிடையாது. மகளிர் தினத்தில் பேச வேண்டுமானால் வேலு நாச்சியார் போன்ற பல பெண்களை பற்றி பேசுவேன். ஒரு பெண்ணை குறை சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விஜய் என்னுடைய நெருங்கிய நண்பர். இப்போதும் நண்பராகத்தான் இருக்கிறார். அவருடைய மனைவி சங்கீதா இன்னும் அவருடைய மனைவிதான். விவாகரத்து இன்னும் கிடைக்கவில்லை. அதனால் அவரை முன்னாள் மனைவி என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் மூன்றாவது நபராக திரிஷா பற்றி நான் பேச வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறியிருந்தார்.
பார்த்திபன் 2வது வீடியோ
இதையடுத்து இன்று 2வது வீடியோவை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில், பார்த்திபன் கூறியுள்ளதாவது: விஜயின் வளர்ச்சி அபாரமான வளர்ச்சி. அது வேறு எங்கேயோ சென்று கொண்டுள்ளது. வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதன் மூலமாக காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி பேசியது. தவெகவுடன் சென்றுவிடுவோம் என்று கூறியது.
இதனால் 25 தொகுதிக்கு பதில் திமுக 28 + 1 தொகுதிகளை காங்கிரஸ்க்கு வழங்கியது. இப்போது அங்கு நடக்கும் பேச்சு என்னவென்றால் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு(திரிஷா - விஜய் பங்கேற்க நிகழ்ச்சி) பிறகு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் கொடுத்திருக்க வேண்டாம் என்பது கமெண்ட்டாக உள்ளது.
விஜய் யோசித்து இருப்பார்
விஜய் கட்சியில் இருந்த பெண் நிர்வாகியின் பேச்சு.. இதை மட்டும் தவிர்த்து இருக்கலாமோ என்ற அடிப்படையில் தந்தை சந்திரசேகரின் பேச்சு.. ஏன் விஜய் கூட இதுபற்றி யோசித்து இருப்பார். வேண்டாம் வீட்டிலேயே இரு என்று சொல்லியிருந்தால் இந்த வேண்டாத பிரச்சனை வந்திருக்காது என்று நினைத்து இருப்பார். இதை மட்டும் தான் நான் வெளிப்படுத்திய ஒரு விஷயமும் கூட.
திரிஷாவுக்கு வாழ்த்துகள்
எதுக்குமே பதில் சொல்லாத ஒருவர் என்னுடைய கருத்துக்கு பதில் சொன்னதால் நீண்ட பதிவில் பதில் சொல்ல வேண்டியாதாகிவிட்டது. அய்யா நல்லக்கண்ணு உடல்தானம் செய்துள்ளது போல் நானும், என்னுடைய மனைவியும் உடல் தானம் செய்துள்ளோம். வேறு யாரெல்லாம் உடல்தானம் செய்துள்ளார்கள் என்று கேட்டபோது திரிஷாவின் பெயரை சொன்னார்கள். அப்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. திரிஷாவை நான் பாராட்ட நினைத்தேன். இந்த நேரத்தில் இவ்வளவு கசப்பான விஷயத்திலும் கூட திரைப்பட நட்சத்திரம் எல்லாவற்றையும் மீறி உடல்தானம் செய்ய முன்வந்துள்ள திரிஷாவுக்கு மனப்பூர்வ வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
இளையராஜா சொன்ன அட்வைஸ்
இப்படித்தான் ஒவ்வொரு பெண்களிடமும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடம் உள்ளது. என்னடைய தவறுகளும் அந்த மாதிரி தான். என்னுடைய தவறுகளில் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய தவறுகளும் அப்படித்தான். தவறுகளில் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் மேடை கச்சேரியில் அனைவரும் சரியாக பாடல் பாடியபோது ராஜா சார் (இளையராஜா) 2 வரிகளை விட்டுவிட்டார். அப்போது அவர் கூறியது வாழ்க்கையில் தப்பு செய்வதும், இந்த மேடையில் தப்பு செய்வதும் ஒன்று தான். அதனை ரீவைண்ட் செய்யவே முடியாது என்றார். அந்த தப்பை சரிசெய்ய முடியாது. ஆனால் அதுபோல் இன்னொரு தப்பு நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.
மன்னிப்பு - இனி பேசமாட்டேன்
அதனால் நண்பர்கள் அனைவரும் நான் பேசியதில் தவறு ஏதேனும் இருந்தால் மறுபடியும் ஒருமுறை மன்னிக்க வேண்டும். அதில் இருக்கும் சரியான விஷயத்தை மட்டும் எடுத்து கொள்ளும்படி அனைவரிடமும் அன்போடு கேட்டு கொள்கிறேன். ஒரே வீடியோவில் பதிவு செய்த விஷயத்தை 2 ஆக பகிர்கிறேன். வேறு எதையும் இரண்டாக்க அல்ல. என் பக்க விளக்கத்தை சொல்வதால் பக்க விளைவுகள் அநாகரிகமாக அரங்கேறும் என்பதை அறிந்து இதுபற்றி இனி பேசமாட்டேன். இது நம் அனைவருக்கும் நல்லது நன்றி'' என்றார்.
-
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications