பார்த்திபனின் "குந்தவை" கமெண்ட்.. பொங்கி எழுந்த திரிஷா.. T-20யை தாண்டி டிரெண்டிங்கில் போன டாப் நடிகை
சென்னை: தமிழக அரசியலிலும், திரைத்துறையிலும் தற்போது பேசுபொருளாகியிருப்பது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான சர்ச்சைகள்தான்.. சோஷியல் மீடியா முழுக்க திரிஷாவுக்கு ஆதரவும், எதிர்ப்புமான கமெண்ட்கள் பதிவாகி உள்ளன... இதனால் தொடர்ந்து தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளாராம் திரிஷா. இதுதொடர்பான ஹேஷ்டேக்கும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கிவிட்டது.. தொடர்ந்து விஜய் மீது சங்கீதாவின் குற்றச்சாட்டும், பொதுவெளியில் கவனம் பெற்று வருகிறது.

பார்த்திபன் குந்தவை கமெண்ட்
சங்கீதா தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அது தனக்கு பெரும் மன உளைச்சலைத் தருவதாகவும் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது..
இதை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக பங்கேற்றது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல மாறி உள்ளது. கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவிற்கு விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது.
திரிஷா பதிலடி
சொந்தக் கட்சித் தொண்டர்களே விஜய்யின் இந்த செயலை விமர்சித்து வரும் நிலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பார்த்திபனிடம் திரிஷா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது..
அங்கிருந்த ஸ்கிரீனில் திரிஷாவின் போட்டோ காட்டப்பட்டபோது, தனது பாணியில் பதிலளித்த பார்த்திபன், "இந்தக் குந்தவையை கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே குந்த வைச்சா பிரச்சினை வராது., எல்லா விஷயத்தையும் வெளிப்படையாகப் பேச முடியாது, சில கவிதைகளை ரசிக்க மட்டுமே முடியும், வாசிக்க முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டது திரிஷா ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
டி-20 உலகக்கோப்பை
பார்த்திபனின் இந்த நகைச்சுவை கலந்த சீண்டல் மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், நடிகை திரிஷா இதற்கு மறைமுகமாகப் பதிலடி திரிஷா, "மைக்ரோஃபோன் முன்னால் நின்று பேசுவதால் மட்டும் ஒரு கருத்து புத்திசாலித்தனமாகி விடாது, அது பேசுபவரின் முட்டாள்தனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும், அறிவு இல்லாமல் பேசப்படும் கொடூரமான வார்த்தைகள், யாரைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவர்களை விடப் பேசுபவரின் குணத்தையே பிரதிபலிக்கும்" என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்..
இந்த விவகாரம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் முதலிடம் பிடித்துள்ளது. பார்த்திபனுக்கு திரிஷா கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே திரிஷா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியும் வருகிறது.
டாப் நடிகை டிரெண்டிங்கில்
நேற்று முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்த விவாதங்கள் அனல் பறந்தாலும், அதற்கு இணையாக திரிஷா தொடர்பான ஹேஷ்டேக்குகளும் சரிசமமாக முன்னிலை வகித்து கொண்டிருக்கிறது.
அதாவது #T20WorldCup2026final என்ற ஹேஷ்டேக்குக்கு இணையாக #Trishq என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளதாம்..
மொத்தத்தில், விஜய்யின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களுக்கு மத்தியில், பார்த்திபனின் பேச்சும் திரிஷாவின் பதிலடியும் இந்தச் சர்ச்சையை மேலும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளன..!!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications