அனைத்துக் கட்சிக் கூட்டம்.. கட்சிகளின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் யார் யார்? இதோ லிஸ்ட்!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். எந்தக் கட்சி சார்பில் யார் யார் பங்கேற்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தொகுதி மறுவரையறை
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கூட்டியுள்ளார்.
அரசியல் வேறுபாடுகளையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கவுரவம் பார்க்காமல் இந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
தமிழகத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அதிமுக, காங்கிரஸ், விசிக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 2 பிரதிநிதிகளும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் தலா ஒரு பிரதிநிதியும் கலந்து கொள்ள உள்ளனர். எந்தக் கட்சி சார்பில் யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

கட்சிகள் சார்பில் பங்கேற்பவர்கள்
திமுக - ஆர்.எஸ்.பாராதி, பி.வில்சன்
அதிமுக - ஜெயக்குமார், இன்பதுரை
காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி - தொல். திருமாவளவன், ரவிக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- முத்தரசன், பெரியசாமி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - பெ.சண்முகம், சச்சிதானந்தம் எம்.பி
மதிமுக - வைகோ, துரை வைகோ எம்.பி
பாமக - அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி
தேமுதிக - பார்த்தசாரதி, இளங்கோவன்
மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்
தமிழக வெற்றிக் கழகம் - புஸ்ஸி என்.ஆனந்த்

-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications